ஐக்கிய நாடுகள் சபையில் எரிக் சொல்ஹைமுக்கு புதிய பதவி! புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு

erick_solheim_001ஐக்கிய நாடுகள் சபையில் எரிக் சொல்ஹைமுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி குறித்து புலம்பெயர் தமிழர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வெளிப்பட்டுள்ளது.

நோர்வே ராஜ்ஜியத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹைம் , இலங்கையில் விசேட சமாதானத் தூதுவராகவும் கடமையாற்றியிருந்தார்.

விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிலவிய காலப்பகுதியில் அரசாங்கம் மற்றும் புலிகள் இடையேயான தகவல் பரிமாற்றங்கள், போர்நிறுத்த இணக்கம் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் அவர் தன் பங்களிப்பை நல்கியிருந்தார்.

எனினும் எரிக் சொல்ஹைம் சமாதானத்தூதுவர் என்ற வகையில் தமிழ் மக்களின் பேரவலங்களை தடுத்து நிறுத்த போதுமான பங்களிப்பை வழங்கவில்லை என்றொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது அவர் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் குறித்த பதவிக்கு சொல்ஹைம்மை பரிந்துரைத்துள்ளார்.

இதற்கு புலம் பெயர் தமிழ் அமைப்புகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

தமிழர் இனப் படுகொலைக்குத் துணைபோனதற்குப் பரிசாகவே குறித்த பதவி சொல்ஹைமுக்கு வழங்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: