மதுவிலக்கு கடினமானது குறைவாக அருந்துங்கள்: சொல்கிறார் உ.பி. முதல்வர்

akhileshமதுவிலக்கு முடிவை அவசரமாக எடுக்க முடியாது, குறைவாக மது அருந்துங்கள் என்றே இப்போதைக்குக் கூற முடியும் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் முழு மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளார் அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார்.

இதை அடுத்து அதன் அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்துக்கு மதுபிரியர்கள் படை எடுப்பதால் அங்கு மதுவிற்பனை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நிரூபர்களை சந்தித்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ், உத்தரப்பிரதேசத்தில் முழு மதுவிலக்கு முடிவை உடனடியாக எடுப்பது சாத்தியமல்ல, குறைவாக மது அருந்துங்கள் என்றே இப்போதைக்கு அறிவுரை வழங்க முடியும்.

கரும்பு விவசாயிகளின் நலன், மதுக்கடைகளில் பணியாற்றும் லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும் இது.

எனவே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க முடியாது என்று கூறியுள்ளார். முழு மதுவிலக்கால் மாநிலத்துக்கு ஏற்படும் வருவாய் இழப்பை பிறவற்றின் மூலம் ஈடுகட்ட முடியும் என்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கூறியதற்கு பதில்அளிக்கும் வகையில் அகிலேஷ் யாதவ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பீகாரின் மற்றொரு எல்லையில் அமைந்துள்ள நேபாள நாட்டில் மது விற்பனை அதிகரித்துள்ளது. இந்தப் பகுதியில் உருவான திடீர் குடிசைகளில் நேபாளத்தில் தயாரிக்கப்படும் மது விற்பனை செய்யப்படுகிறது.

இதை அருந்துவதற்காக பீகார் வாசிகள் தினம்தோறும் அங்கு படை எடுத்த வண்ணம் உள்ளனர். இதனிடையே எல்லை தாண்டி நேபாள நாட்டுக்கு மது அருந்தச் சென்ற 70 இந்தியர்களை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com

TAGS: