மூசா அமான் சம்பந்தப்பட்ட ஆவணங்களை வெளியிடு: யுபிஎஸ் வங்கிக்கு சிவீஸ் நீதிமன்றம் உத்தரவு

musa amanசுவீஸ்  உச்ச  நீதிமன்றம்,  யுபிஎஸ்  வங்கி  அதற்கும்  சாபா  முதலமைச்சர்  மூசா  அமானுக்குள்ள  வர்த்தகத்  தொடர்புகள்  சம்பந்தப்பட்ட   ஆவணங்களை  அந்நாட்டுச்  சட்டத்துறைத்  தலைவரிடம்  கொடுக்க  வேண்டும்  என  உத்தரவிட்டுள்ளது.

அந்த  ஆவணங்களைக்  குற்றவியல்  வழக்குத்  தொடுப்பதற்கும்  பயன்படுத்திக்  கொள்ளலாம்  என்றும்  அது  கூறியது.

இந்த  முக்கியமான  தீர்ப்பை  வரவேற்ற  அனைத்துலக  அரசுசாரா  அமைப்பான  புருனோ  மான்செர்,  மூசாவுக்காக  பணத்தைச்  சலவைசெய்யும் (கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும்)  நடவடிக்கையில்  ஈடுபட்டதாக  யுபிஎஸ்மீது  வழக்கு  தொடுக்கப்பட  வேண்டும்  என்று  எதிர்பார்க்கிறது.

மூசா,  சாபாவில்  வெட்டுமர  குத்தகைகள்  வழங்கியதில்  யுஎஸ்$90  மில்லியன்  ஊழலில்  சம்பந்தப்பட்டிருப்பதாகவும்  அவருக்கும்  யுபிஎஸ்  வங்கிக்குமுள்ள   தொடர்புகளைக்  காண்பிக்கும்  வங்கியின்  இரகசிய  ஆவணங்களை   சுவீஸ்  அதிகாரிகள்  பறிமுதல்  செய்திருக்கிறார்கள்  என்றும்  2014  நவம்பரில்  அறிவிக்கப்பட்டிருந்தது.