மலேசியாவிலிருந்து திருடப்பட்ட பணம் – திருடனை பிடிக்க வேண்டும்!

aru 1mdbமலேசிய நாட்டிலிருந்து ‘திருடப்பட்ட’ பணம் என்னானது என்று 1 எம்டிபி பற்றி வெளியான அமெரிக்க நீதித்துறையின் 136 பக்க விசாரணை அறிக்கை போதுமான தகவலை கொண்டுள்ளது என்கிறார் ஆறுமுகம்.  இதன் வழி நமது அரசாங்கம் பெயர் குறிப்பிடப்படாத அந்த மலேசிய முதலாம் எண் குற்றவாளியை உடனடியாகப் பிடித்து விசாரணை செய்ய வேண்டும் என்கிறார்.

அமெரிக்காவின் எப்பிஐ (FBI) எனப்படும் புலானாய்வுத்துறை விசாரணையின் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை 1எம்டிபி வழி வெளியான குறிப்பப்பட்ட அளவிலான பணம் எப்படி எங்கே யாரிடம் சென்றது என்று தெளிவுபடுத்துகிறது.

உதாரணமாக, பிரதமர் கணக்கில் வரவான USD 681 மில்லியன் (ரிம 2.08 பில்லியன்)   21.3.2013 மற்றும் 25.3.2013 ஆகிய தேதிகளில் தானூர் என்ற 1எம்டிபி சார்ந்த நிருவனத்தின் வழியாக வந்துள்ளதாக தெரிகிறது. முன்பு இது ஓர் அரபு நாட்டினரின் நன்கொடையென கூறப்பட்டது.    இந்த அறிக்கை பிரதமர் நஜிப்பின்  பெயரை குறிப்பிடவில்லையென்றாலும் அந்த அறிக்கையில் 36 இடங்களின் குறிப்பிடப்பட்டிருக்கும் அரசாங்க அதிகாரி 1 என்பது  இவரைத்தான் குறிக்கும் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

fbiஇது முழுக்க முழுக்க அம்னோ சார்ந்த ஒரு பிரச்சனையல்ல. இது நமது நாட்டின் பிரச்சனை என்பதை மக்கள் உணர வேண்டும். இவ்வேளையில், “1எம்டிபி நிதியிலிருந்து களவாடல் நடந்திருப்பது குறித்து அமெரிக்க நீதித்துறை மேற்கொண்டிருக்கும் விசாரணை பற்றி ஊகங்கள் எதுவும் செய்ய வேண்டாம்” என்று பிரதமர் நஜிப் வலியுறுத்தியுள்ளது வேடிக்கையாக உள்ளது.

“சட்ட நடவடிக்கைகள் முழுமைபெறும் வரையில் நாம் எந்த ஊகங்களையும் செய்யாமல் இருப்பது விவேகமாகும்” என்கிறார் நஜிப். சட்ட நடவடிக்கை எடுக்க அதன் சட்டத்துறை தலைவர் முன்வருவாரா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகும்.

பணம்  கையாடப்பட்டதன்   தொடர்பில்    தனிப்பட்ட   நபர்களுக்கு    எதிராக   கிரிமினல்    குற்றச்சாட்டு    எதுவும்   இல்லை என்கிறார்  சட்டத்துறை தலைவர் ஏஜி  முகம்மட்   அபாண்டி  அலி. குற்றச்சாட்டை இவர்தான் தயார் செய்யவேண்டும். அதைவிடுத்து இல்லை என்பது  வேடிக்கையிலும்  வே டிக்கையாகவுள்ளது என்கிறார் வழக்கறிஞருமான கா. ஆறுமுகம்.

அமெரிக்க நீதித்துறை (டிஒஜே) தொடுத்துள்ள இந்த சிவில் வழக்குகள் வழி சுமார் ரிம 12 பில்லியன் சார்ந்த பட்டுவாடாக்களும் சொத்துக்களும் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.