சிவில் பறிமுதல் என்றாலும் குற்றம் நிகழ்ந்திருக்கிறது என்றுதான் பொருள், டிஏபி எம்பி

simஅமெரிக்க   நீதித்துறை   சொத்துகளைப்  பறிமுதல்   செய்ய   சிவில்  வழக்கைத்   தொடுத்துள்ளது  என்றால்   ஒரு  குற்றச்செயல்  நிகழ்ந்துள்ளது  என்றுதான்  பொருள்   என்கிறார்   டிஏபி   எம்பி   ஸ்டீபன்  சிம்.

“அது   ஒரு  ‘சிவில்  வழக்கு’த்தான்    கிரிமினல்    வழக்கல்ல   என்ற   எதிர்வாதம்   அடிக்கடி  முன்வைக்கப்படுகிறது.      பிரதமர் (நஜிப்  அப்துல்  ரசாக்)கூட   ஒரு  நேர்காணலில்  அப்படித்தான்    கூறியிருந்தார்.

“இது    வேறு    வழியில்லாமல்,    அறியாமையால்    முன்வைக்கப்படும்    ஒரு  பலவீனமான  வாதம்,   பிரதமரையும்   1எம்டிபி-யையும்   தற்காக்கும்  உள்நோக்கத்தைக்   கொண்ட  ஒரு  முயற்சி  என்பது   தெளிவு”, என  புக்கிட்   மெர்தாஜாம்  எம்பி -யான  சிம்   ஓர்   அறிக்கையில்   கூறினார்.

“எளிய   சொற்களில்   சொல்வதென்றால்,     ஒரு  குற்றச்செயல்  நிகழ்ந்திருக்கிறது    அதனால்தான்   சொத்துகள்   பறிமுதல்   செய்யப்படுகின்றன”,  என்றாரவர்.

எனவே,  அதன்மீது   சட்டத்துறைத்   தலைவர்   முகம்மட்   அபாண்டி   அலி   நடவடிக்கை   எடுக்க   வேண்டும்   தவறினால்  குற்றத்துக்கு    அவரும்  உடந்தை  எனக்  கருதப்படுவார்   என்று   சிம்   கூறினார்.