மிருகபலியைத் தடுக்க வருகிறது புதிய சட்டம்!

animal_sacrificeகோயில்களில் மிருகங்கள் பலியிடப்படுவதை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்துவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் மிகவிரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கோயில்களில் வேள்விகளின்போது ஆடுகள், கோழிகள் பலியிடப்படுவதற்கு தற்போது நீதிமன்றங்களினால் இடைக்காலத் தடை உத்தரவுகளின் அடிப்படையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவுகளை மீளப் பெறச் செய்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமானால் கோயில்களில் பலியிடுவதற்கு ஏராளமான ஆடு மற்றும் கோழிகள் தயாராகவுள்ளன.

கோயில்களில் தெய்வத்தின் பெயரைச் சொல்லி மிருகங்கள் பலியிடப்படுவதை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கு சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்த சட்டவரைவு இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு பொதுமக்கள் கருத்தறியப்பட்டு தேவையேற்படின் திருத்தங்களுடன் நாடாளுமன்ற அங்கீகாரத்துக்கு விடப்படும்.

இதேவேளை, கோயில்களில் மிருகப்பலியிடலை இந்து சமய நூல்கள் எதிலும் பரிந்துரைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilcnn.lk

TAGS: