குடிநுழைவுத் துறையைத் துப்புரவுபடுத்த ஆர்சிஐ தேவை: புதிய தலைவருக்கு அறிவுறுத்து

simகுடிநுழைவுத் துறை   நெருக்கடியில்    சிக்கிக்   கொண்டிருக்கிறது   என்று  குறிப்பிட்ட    புக்கிட்  மெர்தாஜாம்  எம்பி   ஸ்டீபன்  சிம்,   அத்துறையின்      புதிய  தலைமை  இயக்குனர்  முஸ்தபார்  அலி    அதனைத்   துப்புரவுபடுத்த    அரச   விசாரணை  ஆணையம்     தேவை  என்ற  கோரிக்கையை   ஏற்று   அதற்கு  ஆதரவாக   நடந்து  கொள்ள  வேண்டும்  எனக்   கேட்டுக்கொண்டார்.

அத்துறையில்     பல   பிரச்னைகள்   நிலவுவதாகவும்    அவற்றுள்  ஆவணப்படுத்தப்படாத  அன்னிய  தொழிலாளர்கள்,   மனித   கடத்தல்   நடவடிக்கைகள்,   “ஒழுங்கற்ற”  அன்னிய   தொழிலாளர்  கொள்கை   போன்றவை  முக்கியமானவை   என்று  சிம்  ஓர்   அறிக்கையில்   கூறினார்.