ஊழல் ஹராமானது, நாட்டையே அழித்துவிடும் – மகாதிர்

mahதம்  முன்னாள்  கட்சியான   அம்னோவுக்கு  எதிராக   தொடர்ந்து  தாக்குதல்    தொடுத்துவரும்    முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்,    மக்கள்   ஊழலை  நிராகரிக்க    வேண்டும்  என்று   கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அம்னோ    அதன்   தலைவர்   நஜிப்   ரசாக்   நீதிமன்றத்தில்   நிறுத்தப்படுவதைத்   தடுக்கப்    போராடி  வருகிறது    என்றாரவர்.

“அதுதான்  இப்போது  அம்னோவின்  போராட்டமாகும்.  அதனால்தான்  நான்  அதைவிட்டு   விலகினேன்.

“ஒன்று  கெட்டுப்போனதை   அறிந்தால்  அதைச்   சகித்துக்  கொண்டிருக்க  முடியாது.  அதுதான்  நான்  விரைந்து   வெளியேறினேன்”, என்று  மகாதிர்  கூறியதாக   சினார்  ஹரியான்   அறிவித்துள்ளது.

மகாதிர்,  கெடா,  கூலிம்   அருகில்,  கராங்கானில்   மலேசியாவைக்  காப்போம்  இயக்கத்தின்   நிகழ்வு  ஒன்றில்   பேசினார்.

ஊழல்  என்பது  ஹராம்.  அது    “நாட்டையே  அழித்துவிடும்”   என்பதால்   மக்கள்  அதை  நிராகரிக்க   வேண்டும்  என்றவர்   வலியுறுத்தினார்.

“எனவே,  மக்கள்  நாங்கள்  அமைக்கும்  புதிய   கட்சியில்  வந்து   சேர   வேண்டும்”,   என்றவர்   கேட்டுக்கொண்டார்.

தாம்  அமைக்கும்  புதிய  கட்சி   ஊழலை  எதிர்க்கும்  என்றவர்  சூளுரைத்தார்.