ஹாங்காங் கடலோரத்தில் ஜோ-லோவின் உல்லாசப் படகு?

jhoமலேசிய   தொழில்  அதிபர்  ஜோ  லோவுக்குச்   சொந்தமானது   என்று  கூறப்படும்    ஆடம்பர  உல்லாசப்  படகான    ‘Equanimity’  ஹாங்காங்   வந்திருப்பதாக   சவுத்   சைனா   மார்னிங்  போஸ்ட் (எஸ்சிஎம்பி)    அறிவித்துள்ளது.

உலகின்   மிகப்  பெரிய  படகுகளில்   ஒன்றான  அது   எதற்காக   ஹாங்காங்  வந்தது   என்பது    தெளிவாகத்   தெரியவில்லை   அந்த   நாளேடு   கூறியது.     அதன்  உரிமையாளர்   அதை   விற்பதற்கு   முயன்று   வருகிறார்  என்று  ஊகங்கள்    கூறப்படுகின்றன.

“ஆனால்,   அதனுடன்   தொடர்புள்ளவர்கள்  எதுவும்   கூற  மறுக்கிறார்கள்”,  என்று   எஸ்சிஎம்பி)  கூறியது.

அந்நாளேடு  ஹாங்காங்கில்   ஆடம்பர  உல்லாசப்  படகுகளை   விற்பனை    செய்யும்    Northrop & Johnson  நிறுவனத்தைத்   தொடர்பு  கொண்டு  விசாரித்தது.

ஆனால்,  அந்நிறுவனம்  தகவல்    தெரிவிக்க   தயாராக  இல்லை.

“எங்கள்  வாடிக்கையாளர்  விளம்பரத்தை   விரும்பவில்லை”,  என்று   கூறிவிட்டது.

உல்லாசப்  படகு   பற்றிய   ஏடுகள்   ஜோ  லோ-தான்   அந்தப்  படகுக்குச்  சொந்தக்காரர்    என்று  கூறி  வந்திருப்பதை   எஸ்சிஎம்பி   சுட்டிக்காட்டியது.   ஆனால்,   அவரின்   வழக்குரைஞர்கள்   அதை   மறுக்கிறார்கள்.

“ஆனால்,  விரும்பும்  போதெல்லாம்   அதில்   அவர்  விருந்து   வைக்கிறார்.   லியோனார்டோ    டி    கேப்ரியோ    உள்பட    ஹாலிவூட்   நட்சத்திரங்கள்  கலந்துகொண்ட  பல  விருந்துகளை   அந்த  உல்லாசப்  படகில்   நடத்தியிருக்கிறார்”,  என்று   அந்த    நாளேடு   மேலும்    கூறியது..