ரபிசி: சொத்து விவரம் அறிவித்ததும் நன்கொடைகள் குவிந்தன

rafiziபிகேஆர்   உதவித்   தலைவர்  ரபிசி   ரம்லி    அவரது   சொத்து  விவரத்தை   பகிரங்கமாக  அறிவித்தது   அவருக்குப்   பாதகமாக  அல்லாமல்  சாதகமாக   அமைந்தது.

சமூக  ஊடகங்களில்  அவரது    புகழ்   கூடியது.  பிஎன்  ஆள்கள்கூட   அவரைப்  பாராட்டினார்கள்

அது  மட்டுமல்லாமல்,  அதற்கு  முன்பு   தம்மிடம்    உதவி   கேட்டு  வந்தவர்கள்   தம்  நிதிநிலை   தெரிந்த  பின்னர்   தம்மை   நாடி  வருவதை  நிறுத்திக்  கொண்டார்கள்.  அதற்குப்  பதிலாக   நன்கொடைகள்  குவிந்தன    என்றாரவர்.

“அவ்வப்போது     சாதாரண  குடிமக்கள்   என்  சேவை   மையத்துக்கு   உதவி  கேட்டு  வருவதுண்டு.  என்னுடைய  நிதிநிலையை   அறிந்ததும்   அவர்கள்   எனக்காக  வருந்தினார்கள்”,  என்று  ரபிசி   இன்று  ஓர்   அறிக்கையில்  கூறினார்.

எனவே,  சொத்து  விவரத்தை    அறிவிப்பது   தேர்ந்தெடுக்கப்பட்ட   பிரதிநிதிகளுக்கும்   அவர்களின்  குடும்பத்தாருக்கும்   ஆபத்தாக  முடியும்  என்று   கூட்டரசுப்  பிரதேச   அமைச்சர்   தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  கூறியிருப்பது  சுத்த  அபத்தம்   என்றாரவர்.