தங்கம் வென்ற ஆசியான் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்நாள் முழுக்க இலவச விமானப் பயணம்

airரியோ  ஒலிம்பிக்   போட்டியில்    தங்கப்  பதக்கம்  வென்ற   ஆசியான்  விளையாட்டு  வீரர்களும்   வீராங்கனைகளும்   வாழ்நாள்   முழுக்க   தன்  விமானங்களில்   இலவசமாக    பயணம்  செய்யலாம்   என  ஏர்ஏசியா   அறிவித்துள்ளது.

“இந்த     ஒலிம்பிக்   போட்டி  ஆசியான்  பெருமைப்படத்தக்க   ஒன்றாக  அமைந்தது.  ஆசியானில்   வேர்களைக்  கொண்ட   ஏர்ஏசியா  நமக்கு   மட்டற்ற  மகிழ்ச்சியைத்  தந்தவர்களுக்கு  வெகுமதி   அளிக்க   விரும்புகிறது”,  என   அதன்   தலைமை  செயல்   அதிகாரி    டோனி  பெர்னாண்டஸ்    கூறினார்.

வெள்ளி,  வெண்கலப்   பதக்கம்   வென்றவர்களுக்கும்   தக்க  பரிசுகள்  வழங்கப்படும்   என   பெர்னாண்டஸ்   தம்  முகநூல்  பக்கத்தில்   கூறினார்.