முன்னாள் பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் அமானாவில் சேர்வார்

husamபாஸ்   கட்சியின்   முன்னாள்  உதவித்   தலைவர்   ஹுசாம்   மூசா   பார்டி  அமனா   நெகாரா(அமனா)வில்   சேரப்   போவது  பற்றி   இன்றிரவு   அறிவிப்பார்   என  எதிர்பார்க்கப்படுகிறது.

அமனா   தலைவர்கள்   பலரும்  அதை  உறுதிப்படுத்தினார்கள்.  சாலோர்  சட்டமன்ற  உறுப்பினரான   ஹுசாம்,   இன்றிரவு    சைபர்  ஜெயாவில்   தம்   முடிவை    அறிவிப்பார்   என்றவர்கள்   தெரிவித்தனர்.