எம்ஏசிசி 1எம்டிபி-யைக் கண்டுகொள்ளாமல் ஊழல்- எதிர்ப்பில் ஈடுபடுவது நம்பும்படியாக இல்லை

khaiமலேசிய  ஊழல்தடுப்பு    ஆணையம் (எம்ஏசிசி)   1எம்டிபி  ஊழலைக்  கண்டுகொள்ளாமல்    பல்வேறு    உயர்   அதிகாரிகள்மீது   அதிரடி   நடவடிக்கைகள்   மேற்கொண்டு  வருவதை     முன்னாள்  அம்னோ   தலைவர்   கைருடின்   அபு  ஹசான்   சாடினார்.

பல   தடவை   எம்ஏசிசி-இடம்     1எம்டிபி  ஊழல்   மீதும்    பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்கின்   சொந்த வங்கிக்  கணக்கில்   பல- பில்லியன்  ரிங்கிட்    இருந்தது   பற்றியும்  புகார்   செய்திருப்பதாக  கைருடின்     கூறினார். ஆனால்,  நடவடிக்கை   எடுக்கப்பட்டதில்லை.

“எம்ஏசிசி,    பிரதமர்   அதிகார-மீறலில்    ஈடுபட்டதாகக்   கூறப்படுவது    பற்றி   விசாரிக்காமல்      சிறுசிறு   விவகாரங்களில்  மட்டுமே  துணிச்சலைக்  காண்பிப்பது   போதாது”, என்று   கைருடின்  நேற்றிரவு   ஓர்   அறிக்கையில்   கூறினார்.

எம்ஏசிசி,  கடந்த    மாதம்   சுல்கிப்ளி  அஹ்மட்    அதன்   தலைமை  ஆணையராக   பொறுப்பேற்றது  முதல்   அரசாங்க  உயர்   அதிகாரிகள்  பலரின்மீது   நடவடிக்கை   எடுத்துள்ளது.

ஆனால்,   எம்ஏசிசி   என்னதான்    நடவடிக்கை    எடுத்தாலும்   அது  1எம்டிபி    ஊழலையும்   பல-  பில்லியன்  ரிங்கிட்    வங்கி  இருப்பையும்   கண்டுகொள்ளாதவரை   மக்களுக்கு   அதன்மீது    நம்பிக்கை    வராது  என  கைருடின்   கூறினார்