விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றதா?

Logo-LTTEஹமாஸ் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற ஆர்வலர் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏனெனில், இந்த அமைப்புகள் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டது என்பதற்கான எந்த சாட்சியங்களும் நிரூபிக்கப்பட வில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனம் மற்றும் இலங்கை குழுக்களுக்கு இடையில் நீண்டகால பிணக்கு தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டாலும் ஐரோப்பிய நீதிமன்றத்தின் கருத்து நீதிமன்றத்தின் நீதிபதிகளை கட்டுப்படுத்தாது.

எவ்வாறாயினும், இது உறுதியாகினால் பாலஸ்தீனர்கள் மற்றும் இலங்கை குழுக்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் இடையிலான போர் தொடர்பில் தீர்வு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹமாஸ் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக 2014 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது மிகஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் ஹமாஸ் அமைப்பு தேசிய அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படாமல் சாட்சியங்கள் இன்றி ஆதாரங்களின் அடிப்படையில் இணையத்தளம் மற்றும் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.

அத்துடன் 2001ஆம் ஆண்டு ஹமாஸ் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆகிய இரண்டும் அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

2014ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு தொடர்பில் இன்று முன்வைக்கப்பட்ட இந்த கருத்து நிராகரிக்கப்பட்டது.

ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியம் பத்திரிகை கட்டுரைகள் மற்றும் இணையத்தள தகவல்கள் தொடர்பில் இருந்த சாட்சியங்களை இது வரையிலும் நிரூபிக்கவில்லை என்று வழக்கறிஞர் Eleanor Sharpston தெரிவித்துள்ளார்.

இந்த குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பிலான தகவல்களையும் சாட்சியங்கள் தொடர்பிலான விபரங்களையும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றில் முன்வைக்க வேண்டும் என்றும் பொது வழக்கறிஞர் Eleanor Sharpston மேலும் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க பல மாதங்கள் ஆகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: