சாபாவில் கடத்தப்பட்டவர்கள் மோசமான நிலையில் உள்ளனர்; அரசாங்க உதவியை நாடுகிறார்கள்

abu sayafஅபு   சாயாவ்   கடத்தல்காரர்கள்    ஜூலை   18-இல்   அபு   சாயாவ்      ஜோலோ   தீவிலிருந்து  கடத்திச்   சென்ற     ஐந்து   மலேசியர்களில்    ஒருவரை   இன்று    த  ஸ்டார்   நாளேட்டுடன்   பேச   அனுமதித்தனர்.

அதை  ஒரு   சிறப்புச்   செய்தியாக    த   ஸ்டார்    வெளியிட்டிருந்தது.

அபு   சாயாவ்   பேச்சாளர்   அபு  ரமி,   அந்த   நாளேட்டை   அழைத்து   பினையாளிகளில்  ஒருவரான  முகம்மட்  ரிட்சுவானுடன்   பேசுவதற்கு   ஏற்பாடு   செய்ததாக     அது   கூறிற்று.

ரிட்சுவான்  ஒன்பது   நிமிடங்களுக்கு   ஸ்டாரிடம்   பேசினார்.  பிணையாளிகளைக்  கடத்தல்காரர்கள்   மிகவும்    துன்புறுத்துவதாக   தெரிவித்தார்.

“இனியும்   எங்களால்   தாங்கிக்  கொள்ள   முடியாது.   வலியால்  நொந்து   போயுள்ளோம்.  எல்லாருக்குமே   முடியவில்லை.

“எல்லாருக்கும்   உடம்பெங்கும்  வெட்டுக்   காயங்கள்.  பலவீனமாக  இருக்கிறோம்.  உண்பதற்கு  உணவில்லை.  அதற்கும்  மேலே   அடியும் உதையும்தான்.
“எங்களைச்  சுட்டுக்கொல்ல   விரும்புகிறார்கள்.  தயவு   செய்து   உதவுங்கள்”,  என்றவர்   உருக்கமாகக்  கேட்டுக்கொண்டார்.

“விரைந்து  உதவுமாறு    அரசாங்கத்தையும்   என்  முதலாளியையும்   கேட்டுக்கொள்கிறேன்.

“ஜோலோ  தீவில்  தவியாய்   தவிக்கிறோம்”,  என்றாரவர்.

இதற்கு  ஒரு  நாள்  முன்னதாக   த  ஸ்டாரைத்   தொடர்புகொண்ட    அபு   ரமி   மலேசியர்களை  விடுவிக்க   100 மில்லியன் பெசோ (ரிம8.5 மில்லியன்)  கொடுக்கப்பட    வேண்டும்  என்று    கோரினார்.