குவான் எங்: பினாங்கில் நீர்ப் பங்கீடு அவசியமில்லை

limபினாங்கில்   நீர்ப்  பங்கீட்டுக்கு    அவசியமில்லாதபடி    நீர்  விநியோகம்   தடையின்றிக்  கிடைப்பதற்கு    ஆவன   செய்யப்படும்.

வறட்சிக்  காலத்தில்கூட   பினாங்கில்   நீர்ப்  பங்கீட்டை   அமல்படுத்தியதில்லை   என  முதலமைச்சர்   லிம்   குவான்  எங்  கூறினார்.

இதற்கு   பினாங்கு  நீர்  விநியோக   கார்ப்பரேசனின்(பிபிஏபிபி)   திறமையான   நிர்வாகம்தான்   காரணம்.

“பல   மாநிலங்கள்  தண்ணீர்  பற்றாக்குறையை    எதிர்நோக்குகின்றன.  ஜோகூரில்   மழை  பெய்யும்போதுகூட  ஒரு    அணை   காய்ந்து  கிடக்கிறது.  பினாங்கிலோ,   ஆயர்  ஈத்தாம்   அணை  கிட்டத்தட்ட    முழுமையாக  நிரம்பியுள்ளது,  தெலோக்  பகாங்   அணைக்கட்டில்   55  விழுக்காட்டுக்குமேல்   நீர்   உள்ளது.  அடுத்த   மழைக்  காலத்தில்   அதையும்  நிரப்புவோம்.

“எங்கள்  மாநிலத்தில்    அதிகமான   மழை  இல்லைதான்   ஆனாலும்,  நீர்ப்  பங்கீடு   நடந்ததில்லை.  அதற்கு  இடமளிக்க   மாட்டோம்   என்ற   உத்தரவாதத்தை   எல்லா  முதலீட்டாளர்களுக்கும்   தெரிவித்துக்  கொள்கிறேன்”,  என  லிம்   கூறினார்.