பிடிபிடிஎன்: கடன் வாங்கியவர்கள் வரலாம் கலந்தாலோசிக்கலாம்

ptptnதேசிய   உயர்க்  கல்விக்  கடனுதவி   நிதி  நிறுவன (பிடிபிடிபிஎன்) த்திடம்  கடன்  வாங்கியவர்கள்   கடனைத்  திருப்பிச்  செலுத்துவதில்    சிரமங்களை   எதிர்நோக்கினால்   அது    குறித்து  பிடிபிடிஎன்னுடன்   நேரடியாக  கலந்து  பேசலாம்.  பிடிபிடிஎன்   அவர்களின்   சிரமங்களைக்   குறைக்க   முயலும்.

பிடிபிடிஎன்     அறிக்கை   ஒன்று,    கடனைத்  திரும்பப்  பெற        மேற்கொள்ளப்படும்     நடவடிக்கைகள்   எந்தத்   தரப்பினருக்கும்       நெருக்குதல்   கொடுக்கும்    நோக்கம்   கொண்டவை    அல்ல   என்று   கூறியது.   தேசிய   கல்வியின்   பொருட்டும்    எதிர்காலத்தில்   மாணவர்களுக்குப்    போதுமான    நிதியுதவி  கிடைக்க    வேண்டும்   என்பதற்காகவுமே   அப்படிப்பட்ட   நடவடிக்கைகள்   எடுக்கப்படுகின்றன.

கொடுத்த  கடன்களைத்   திரும்பப்  பெறுவதற்காக,  கடன்களை  மறுசீரமைப்புச்  செய்வது  பற்றிப்   பேசுதல்,    பிடிபிடிஎன்னின்    மாநில     மற்றும்   கிளை   அலுவலகங்களைத்   திறத்தல்,   வார   இறுதிகளிலும்   அலுவல்   நேரத்துக்கு    அப்பாலும்   அலுவலகங்களைத்        திறந்து  வைத்திருத்தல்,    இணையவழி    கடனைத்   திருப்பிச்  செலுத்தும்    வசதி    போன்ற  அணுகுமுறைகளை   பிடிபிடிஎன்   கைக்கொண்டிருக்கிறது.