ஆண்டு இறுதிக்குள் புதிய எதிரணிக் கூட்டணி அமையும்: முகைதின் கணிப்பு

muhஊழல்  நிரம்பிய   பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்கின்   ஆளும்   கட்சியிலிருந்து   அதிகமான   உறுப்பினர்கள்  வெளியேறி    வருவதால்    ஆண்டு  இறுதிக்குள்  எதிர்க்கட்சிகள்  ஒன்றிணைந்து   புதிய   கூட்டணி   அமைக்க  முடியும்    என  முகைதின்   யாசின்   நம்புகிறார்.

புதிய   கூட்டணி,  பில்லியன் -டாலர்    ஊழல்  புரிந்துவிட்டு    என்னதான்  நெருக்குதல்   கொடுத்தாலும்    பதவியைவிட்டு   அகல   மறுக்கும்   நஜிப்பைப்   பதவி   இறக்கவும்      அம்னோ  தலைமையில்   செயல்படும்  ஆளும்  கூட்டணியை   ஆட்சியிலிருந்து  அகற்றவும்  முழுமூச்சாக   பாடுபடும்.

“அம்னோவுக்கு  ஆதரவு   குறைந்து  கொண்டு   வருகிறது.  அது  அடுத்த  தேர்தல்  வரை  நிலைத்திருக்குமா    என்றுகூட    பலர்   கேள்வி  கேட்கத்   தொடங்கி   விட்டனர்”,  என  முகைதின்  ராய்ட்டர்   செய்தி   நிறுவனத்திடம்   கூறினார்.  முகைதின்  ஏற்கனவே    துணைப்  பிரதமர்    பதவியிலிருந்து   வெளியேற்றப்பட்டவர்.  பொதுத்  தேர்தலில்  எதிரணி  வெற்றி  பெற்றால்    அவர்   பிரதமராக   வாய்ப்பு   உள்ளது.

மலேசியாவின்  அடுத்த   பொதுத்   தேர்தலை   2018  இறுதியில்தான்    நடத்த    வேண்டும்.  அது  முன்கூட்டியே    நடத்தப்படாது   என்பதை   நஜிப்பும்   பெர்லினில்   செய்தியாளர்களிடம்   வலியுறுத்தியுள்ளார்.