பூநகரி சோழர் கால கோவில் முற்றாக அழியும் நிலை.. காரணம் யார்?

Moothoor_aka_statue_84031_445இந்து சமயம் காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஆதி அந்தம் என்பது அறியமுடியாத ஒரு சமயமாகவே இந்து சமயம் இன்றுவரை நோக்கப்படுகின்றது.

அவ்வகையான ஓர் சமயம் கலையிழந்து, நிலையிழந்து போகக்கூடிய சூழல் ஏற்பட்டால் யார் பொறுப்பு? விடை கூற முற்பட்டால் தற்போதைய இந்துக்கள் தலை குனிய நேரிடும் என்பதே உண்மை.

உன் தந்தை யார் என்பது தாயார் சொல்லியே தெரிய வேண்டும். இந்துக்களின் பெருமை தமிழரின் திமிர் நாமே மறக்கலாமா? எதிர்காலத்திற்காக நாம் எதனை விட்டுச் செல்லப் போகின்றோம். “பூநகரி” சைவத்தமிழர் வாழ்ந்த பழமையான இடமே பூநகரி இராச்சியம் எனப்படுகின்றது.

அங்குள்ள பூநகரி மண்ணித்தலை சிவன் ஆலயம் வரலாற்றுத் தொண்மையான சோழர் காலத்து கோயிலாக கூறப்படுகின்றது. ஆனாலும் பாதுகாக்கப்பட வேண்டிய இது தற்போது இருப்பிடம் தெரியாமல் அழிந்து போகக் கூடிய நிலையில் உள்ளது.

திராவிட கட்டடக்கலையை கொண்டு கட்டப்பட்ட பழமையான இந்த ஆலயம் தற்போது இருக்கும் நிலையை பாருங்கள் எங்கே செல்கின்றது இந்துக்களின் பாரம்பரியம்? இப்படியே செல்லுமானால் எதிர்காலத்தில் இந்துக்களின் நிலை என்ன?

இந்து மதத்தின் தொன்மை, பழமை, அருமை, பெருமை அனைத்தையும் உள்ளடக்கிய இந்த கோயில் இன்று கவனிப்பாரற்று கிடப்பதற்கு காரணம் யார்?

-http://www.tamilwin.com

https://youtu.be/N00IGWgTP2A?list=PLXDiYKtPlR7Nm6vLg0Sz-805GXU0GRjpx

TAGS: