ரோஸ்மாவின் பெர்மாத்தாவைத் தற்காத்துப் பேசுகிறார் டிஏபி பிரதிநிதி

yeoபிரதமரின்  துணைவியார்   ரோஸ்மா    மன்சூர்  தலைமையில்   செயல்படும்   பெர்மாத்தாவின்    சிறார்  செறிவூட்டும்  திட்டத்தைத்   தற்காத்துப்  பேச  புதிதாக  ஒருவர்   வந்துள்ளார்.   அவர்தான்   சிலாங்கூர்   டிஏபி   சட்டமன்ற   உறுப்பினர்   இயோ  பீ  இன்.

டமன்சாரா   உத்தாமா   பிரதிநிதியான   இயோ,     சிறார்களின்   தொடக்கநிலை   பராமரிப்பிலும்   கல்வியிலும்(இசிசிஇ)    அரசாங்கம்   செய்துள்ள   முதலீட்டால்     வரிச்  செலுத்துவோருக்கு    நன்மைதான்   என்பதைப்    புள்ளிவிவரம்  காண்பிப்பதாகக்   கூறினார்.

“அந்த   வகையில்,   இசிசிஇ   திட்டத்தை   மேம்படுத்த   அரசாங்கமும்   பெர்மாத்தாவும்   மேற்கொள்ளும்   முன்னெடுப்பை,    ஒரு   மனிதரைப்  பிடிக்கவில்லை   என்பதற்காக   உடனடியாக    ஒதுக்கித்தள்ளக்  கூடாது”,  என  இயோ  ஓர்   அறிக்கையில்   கூறினார்.

“பெர்மாத்தாவுக்கு   அனைத்துலக   அங்கீகாரம்   கிடைக்கிறதோ  இல்லையோ  கவலையில்லை.   புத்ரா  ஜெயா   விரிவாகவும்   முழுமையாகவும்    ஒரு    திட்டத்தை   வகுத்து   செயல்படுத்துவதால்  அடக்கமான   விலையில்   தரமான   குழந்தைப்  பராமரிப்பு   கிடைப்பதற்கு   வகை    செய்யப்பட்டிருக்கிறதே     அதுதான்   முக்கியம்.

“அதன்வழி     நம்  குழந்தைகள்   அனைவருக்கும்   வருமான   வேறுபாடின்றி    இளம்  வயதிலேயே   கற்கவும்   வளர்ச்சி   காணவும்   சம  வாய்ப்பு    கிடைக்கிறது”,  என்றாரவர்.