ஜாஹிட்: வறுமையில் வாடும் எல்லா தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதிநிதிகளுக்கும் அரசாங்கம் உதவும்

zahidதுணைப்    பிரதமர்     அஹமட்    ஜாஹிட்    ஹமிடி,    வறுமைப்  பிடியில்  சிக்கிக்  கொண்டுள்ள   முன்னாள்   தேர்ந்தெடுப்பட்ட   பிரதிநிதிகளுக்கு   அரசாங்கம்   கண்டிப்பாக   உதவும்   என்று  உறுதி   கூறினார்.

ரிம3,000-மும்   அதற்குக்  குறைவாகவும்   பணி  ஓய்வூதியம்   பெறும்  முன்னாள்  தேர்ந்தெடுக்கப்பட்ட   பிரதிநிதிகள்  மன்ற (முபாராக்)   உறுப்பினர்களுக்கு    உதவி   தேவை   என்று   அதன்    தலைவர்  அப்துல்   அசீஸ்  ரஹ்மான்  விடுத்துள்ள   கோரிக்கைக்குத்   துணைப்   பிரதமர்   இவ்வாறு   உறுதி  அளித்தார்.

“இன்ஷா  அல்லா,  பொருளாதாரம்  மீட்சி  பெற  பிரார்த்தனை   செய்யுங்கள்,  நல்லது   செய்வோம்”,  என  இன்று   செந்தூலில்  விஸ்மா  முபாராக்   அடிக்கல்   நாட்டுவிழாவில்  துணைப்   பிரதமர்   கூறினார்.

உதவி   பாரிசான்  நேசனல்    முன்னாள்  பிரதிநிதிகளுக்கு  மட்டுமல்லாமல்   எல்லாருக்கும்   உண்டு.

“அரசாங்கம்    எல்லாத்   தரப்பினருக்கும்  நியாயமாக   நடந்து   கொள்ளும் ,   அவர்கள்  அரசாங்க   உறுப்பினர்களாக   இருந்தாலும்    சரி,   இல்லாவிட்டாலும்  சரி”.

எதிரணி  பிரதிநிதிகளின்  கருத்துகள்  எதிர்ப்பைக்   காண்பிப்பதாக   இருந்தாலும்   அவர்களும்   ஏதாவதொரு   வகையில்   பங்களிப்புச்  செய்திருக்கிறார்கள்   என்பதை     ஒப்புக்கொள்ளத்தான்   வேண்டும்  என  ஜாஹிட்   கூறினார்.