‘புடைத்துக் கிடக்கும் அரசாங்கச் சேவையைக் குறைக்க இயலாது’

pua2017  பட்ஜெட்டில்  36 விழுக்காடு   அரசாங்க  ஊழியர்   சம்பளத்துக்கு   ஒதுக்கப்பட்டிருப்பதால்    அரசு   ஊழியர்  எண்ணிக்கையைக்   குறைக்க    வேண்டும்   எனக்   கோரிக்கைகள்   எழுந்துள்ளன.

ஆனால்,   எதிரணியினர்   ஆட்சிக்கு   வந்தால்கூட     அரசாங்க   ஊழியர்   எண்ணிக்கையைக்   குறைப்பது    சாத்தியமான   ஒன்றல்ல   என்கிறார்   பெட்டாலிங்   ஜெயா   உத்தாரா   எம்பி   டோனி   புவா.

அவர்களின்   எண்ணிக்கையைக்   குறைத்தால்    சிவில்   சேவையினர்   ஆத்திரமுறுவர்.   அரசாங்கச்   செயல்பாடுகள்   முடங்கி  விடும்    என்றாரவர்.
“சிவில்   சேவையில்    ஐந்து   விழுக்காடு    ஆள்குறைப்பு   செய்தாலும்   எஞ்சிய   95  விழுக்காட்டினர்    ஒத்துழைக்க    மாட்டார்கள்.  எனவே,  அது  உகந்த  ஒரு  முடிவல்ல.

“அது  அநியாயமான  சுமைதான்.  வேறு  வழியின்றி   தாங்கிக்   கொள்ள   வேண்டியதுதான்”, என   நேற்று “பட்ஜெட்  2017  பகுத்தாய்வு”   கருத்தரங்கில்  பேசியபோது     புவா   கூறினார்.

மலேசியாவில்    1.6 மில்லியன்  அரசாங்க    ஊழியர்கள்   உள்ளனர்.  32  மில்லியன்  மக்களைக்   கொண்ட  ஒரு   நாட்டுக்கு    இந்த   எண்ணிக்கை    அதிகம்    என்று    கூறப்படுகிறது.