அவைத் தலைவரே, நீர் எம்ஒ1- றால் நியமிக்கப்பட்டவர், நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், லிம் கூறினார்

 

limand speakerடிஎபி சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் தாம் நாடாளுமன்ற சிறப்பு அறையிலிருந்து நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவால் வெளியேற்றப்பட்டதாக கூறினார்.

கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த விவாதத்தில் தமது பேச்சை தொடங்குவதற்கு முன்னதாகவே தம்மை அவைத் தலைவர் வெளியேற்றியதாக லிம் கூறினார்.

“நிலை ஆணைகள் விதி 17 இன் கீழ் நான் எனது சிறப்பு முன்மொழிதலை வைப்பதற்கு முன்பாகவே நான் பண்டிகாரால் விரட்டப்பட்டேன்.

“நான் பேச தொடங்குவதற்கு முன்பே, பண்டிகார் என்னை உட்காரும்படி கூறி விட்டு என்னை திட்ட ஆரம்பித்து விட்டார்.

“நான் நாடாளுமன்றத்திற்கு வெளியில் ஒரு செய்தி அறிக்கை வெளியிட்டத்தின் வழி அவரை கேலி செய்து விட்டதாக கூறினார். கடைசியாக நான் விடுத்த செய்தி அறிக்கை நீதிபதி முன்னிலையில் (sub judice) பற்றியதாகும்’, என்று லிம் நாடாமன்ற முகப்பு அறையில் இன்று கூறினார்.

நாடாளுமன்றத்திற்கு அவமானம்

அவைத் தலைவரும் தாமும் உரத்த குரலில் வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டதாக கூறிய லிம், “அவர் என்னைத் திட்டுவதை நிறுத்துவதற்கு முன்பு, நான் எழுந்து நின்று அவருடன் வாதிட்டேன். என்னைத் திட்ட வேண்டாம் என்று கூறினேன். எனது பேச்சை முடிக்க விடுங்கள் என்றேன். திரும்பவும் அவர் தொடங்கி விட்டார். அதற்குப்பின்னர், நான் அவரை நாடாளுமன்றத்திற்கு அவமானம் என்று கூறினேன்.

“பின்னர், நான் வெளிநடப்பு செய்வதற்கு முன் அவர் என்னைப் பார்த்து கத்தினார். நானும் திரும்ப கத்தினேன். நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆனால் நீர் எம்ஒ1- றால் நியமிக்கப்பட்டவர்.

“பிறகு, அவர் என்னைப் பார்த்து மீண்டும் கத்தினார். ஆகையால் நான் வெளிநடப்பு செய்தேன்”, என்று லிம் மேலும் கூறினார்.