பரஞ்சோதி முத்துவேலுவின் பரதத்தில் திருமுறை

barathamதை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுப் பரிசாக தமிழர்களின் கலையை மீட்டெடுக்கும் வகையில் ஒரு நிகழ்வு நடைபெற  உள்ளது. அதுதான் பரதத்தில் திருமுறை. பரதம் என்பது என்ன என்பதில் சிக்கல் உள்ளது, அதை தமிழ்ப்படுத்தும் வகையில் திருமுறையில் உள்ள நால்வர் பெருமக்களின் ஒன்பது பாடல்களுக்கு  ஒரு நாட்டிய வடிவம் கொடுத்துள்ளார் பரஞ்சோதி முத்துவேல்.

ஆடல்களுக்கு அரசன் சிவபெருமான். உலகத்தின் இயக்கமே இறைவனின் ஆட்டம் என்றும் பொருள் படுத்துவர். அந்த ஆட்டத்தை ஆடல் கலையின் நுட்பங்கள் கற்ற அற்புத கலைஞர் பரஞ்சோதி நாட்டியம் வழி அனைவரையும் ஓர் உணர்வு நிலைக்கு கொண்டு செல்வதில் வல்லவர் என்றால் மிகையாகது.

Baratham2முனைவர் ஆறு நாகப்பன் அவர்களின் உதவியுடன் தாயாரிக்கப்பட்டுள்ள பரதத்தில் திருமுறை என்ற இந்த நுண்ணிய பண்பாட்டு நிகழ்வு மலேசிய சைவ சமயப்பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு தமிழ்ப் பண்பாடு    மீது ஆர்வம் கொண்ட பற்றாளர்களின் ஆதரவு பெருதும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாள்: தை முதல் நாள் திருவள்ளுவர் ஆண்டு 2048 ( 14.01.2017 – சனிக்கிழமை)

நேரம்: இரவு 7.30 முதல் 10.00 வரை

இடம்: கோலாலம்பூர், நுண்கலைக்கோயில் / Temple of Fine Arts – Brickfields.

நுழைவுக் கட்டணம்:  காணிக்கையாக செலுத்தலாம்.