பசித்தால் பணத்தையா திண்பது? தமிழனின் பாரம்பரியத்தை அழிக்க போராடுவது ஏன்?

pongal1தமிழர்களின் திருநாளான பொங்கல் என்றதுமே நமது அனைவரின் நினைவுக்கு வருவது முதலில் சர்க்கரை பொங்கல், கரும்பு, மாடுகள், கிராமம், விவசாயம் என இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

தை முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தொன்று தொட்டு அதாவது 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆம் எதற்காக பொங்கல் கொண்டாடுகிறோம்? என்பது உங்களுக்கு தெரியுமா?

நிலத்தில் இறங்கி வியர்வை சிந்தி உழைக்கும் உழவன் கடவுளுக்கும், இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவே பொங்கல்.

மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

ஆனால் இன்றோ….. சற்று சிந்தித்து பாருங்கள்!…

ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஒரு விவசாயி மரணம்! நமக்கு சோறு போடும் கடவுள்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்!!

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் எனப் பாடினார் வள்ளலார்.

ஆனால், இப்போது பிள்ளை போன்று வளர்த்த பயிர்கள் மழையின்றி கருகியதை பார்க்க முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்தவர்கள் ஏராளம்!!!

இதையெல்லாம் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதேன்? இப்படியே சென்றால் உணவுக்கு நம் நிலை என்ன?

நம் எதிர்கால சந்ததியினர் என்ன செய்வார்கள்? விவசாயத்தை அழித்துவிட்டு நாடு வல்லராசாகிவிடுமா?

பசித்தால் பணத்தையா சாப்பிடுவார்கள்? விவசாயி சேற்றில் கால்வைத்தால் மட்டும் நாம் சோற்றில் கை வைக்க முடியும்?

இதுமட்டுமா உழவுக்கு உதவும் காளை மாட்டை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்வது சரியா?

தான் சாப்பிடவில்லை என்றாலும் தனது உழவுக்கு உதவும் காளை மாட்டுக்கு பிள்ளைக்கு சாப்பாடு போட்டு வளர்ப்பவனே விவசாயி. தன் வீட்டு பிள்ளையை தானே துன்புறுத்துவானா என்ன?

ஜல்லிக்கட்டு மிருக சித்ரவதை என்றால் மாடுகளை கொல்வது எந்த விதத்தில் நியாயம்?

தமிழர்களின் பாரம்பரியத்தை அழிக்க ஏன் இப்படி போராடுகிறார்கள் என்பது புரியவில்லை? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது தமிழும் தமிழனும்..தமிழனே உலகத்துக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தவன் என்பது மறுக்கமுடியாத உண்மை.

இன்றைய இளைஞர்களே..நிகழ்கால சந்ததியினரே!.. உங்களால் எதையும் சாதிக்க முடியும், மெரினாவில் நம் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுக்க ஒன்றுதிரட்ட இளைஞர்கள் கூட்டம் இதற்கு ஓர் உதாரணம்.

உங்களுடைய எழுச்சி நிச்சயம் நாட்டின் சரித்திரத்தை மாற்றி எழுதும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!!!

விவசாயத்தை வளர்ப்போம்!!! விவசாயிகளை காப்போம்!!! நம் பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்!!!

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

-http://news.lankasri.com

TAGS: