ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதிலிருந்து இலங்கை பின்வாங்க முடியாது! மனித உரிமைகள் ஆணையாளர் உறுதி

zeid_zeidஇலங்கை இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய தீர்மானத்திலிருந்து அவர்கள் பின்வாங்க முடியாது. ஐ.நா. இந்த விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன், சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பைத் தளமாகக் கொண்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைனை, கடந்த வாரம் ஜெனிவாவுக்குச் சென்று சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின்போதே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நல்லிணக்கச் செயலணியின் மக்கள் கருத்து அறியும் அறிக்கை தொடர்பிலும் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.

போர்க்குற்ற விசா ரணைக்கு கலப்பு நீதிமன்றப் பொறிமுறையைக் கோரும் பரிந்துரை தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. இலங்கை அரசு கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை பன்னாட்டு நீதிபதிகளின் உள்ளடக்கத்தை ஏற்க மறுப்பது தொடர்பிலும் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹூசைன், “இலங்கை அரசுதான் இணை அனுசரணை வழங்கி 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஐ.நா. அந்த நிலைப்பாட்டில் இப்போதும் உறுதியாக இருக்கின்றது. அதிலிருந்து ஐ.நா. ஒருபோதும் பின்வாங்காது” என்று ஆணையாளர் உறுதியளித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: