பாஸ் கட்சியின் சட்டம் 355 பேரணிக்கு எதிர்ப்புப் பேரணி

akta355தன்னை  ‘பேபாஸ்’   என்று   அழைத்துக்கொள்ளும்   ஒரு    தரப்பு   பிப்ரவரி   18-இல்   பாஸ்  கட்சி    நடத்தும்    சட்டம்  355   பேரணிக்கு     எதிர்ப்புத்    தெரிவிக்கும்   பேரணி    ஒன்றை    நடத்தப்போவதாக    அறிவித்துள்ளது.

சமூக   ஆர்வலர்களான  அஸ்ருல்     முகம்மட்  காலிப்,   அசிரா    அசிஸ்,   ஆர்.  சுரேஷ்   ஆகியோர்    இன்று  ஓர்    அறிக்கையில்    அவ்வறிப்பைச்    செய்திருந்தனர்.

1965  ஷியாரியா    நீதிமன்றச்  சட்ட(சட்டம்  355)த்தைத்    திருத்துவதற்காக      பாஸ்    தலைவர்    அப்துல்   ஹாடி   ஆவாங்   கொண்டுவரவுள்ள   தனி   உறுப்பினர்    சட்ட  முன்வரைவுக்கு  ‘வலுவான   எதிர்ப்புத்   தெரிவிப்பதற்காக’   தாங்கள்   அப்பேரணியை   நடத்துவதாக     அவர்கள்    தெரிவித்தனர்.

“மலேசியர்கள்  ஹாடியின்   சட்ட முன்வரைவை  நிராகரிக்கிறார்கள்”  என்ற  தலைப்பில்    நடைபெறும்   அந்த   எதிர்ப்புப்  பேரணி,  பாஸின்   சட்டம் 355   பேரணி   நடத்தத்   திட்டமிடப்பட்டிருக்கும்       டட்டாரான்   மெர்டேகாவுக்கு   ஒரு  கிலோ  மீட்டர்   தொலைவில்    பாடாங்   மெர்போக்கில்    நடத்தப்படும்.