குவான் எங் தைப்பூசத்தில் பேசியது சினமூட்டும் பேச்சு: மஇகா தலைவர் சாடல்

subraபினாங்கு   தைப்பூசத்   திருவிழாவில்   பினாங்கு   முதலமைச்சர்  லிம்   குவான்   எங்   ஆற்றிய   உரை     உணர்ச்சியைத்   தூண்டுவதாக    இருந்தது     என   மஇகா   தலைவர்    சாடினார்.

நேற்று   பினாங்கு    தண்ணீர்மலை   கோயிலுக்குச்    சென்றபோது   அவரது   உரையைக்   கேட்க   நேரிட்டது   என  சுப்ரமணியம்    கூறினார்.

“நான்  பினாங்கு   தண்ணீர்மலை   கோயில்    வளாகத்தினுள்   நுழைந்ததும்   இனிமையான   சமயப்   பாட்டுக்களோ,  பாசுரங்களோ   என்னை    வரவேற்கவில்லை,  பினாங்கு   முதல்வரும்   துணை   முதலமைச்சரும்   ஆற்றிய  சினமூட்டும்   அரசியல்   பேச்சுகள்தான்    வரவேற்றன”,  என   சுப்ரமணியம்   முகநூலில்   பதிவிட்டிருந்தார்.

தைப்பூசம்  ஒரு   சமய  விழா   என்று  குறிப்பிட்ட  சுப்ரமணியம்  அங்கு   ஆன்மிகத்துக்கு   மட்டுமே    இடமுண்டு    என்றும்   வலியுறுத்தினார்.

லிம்மும்   அவரது   முகநூலில்   சுப்ரமணியத்தை    ஆலயத்தில்   சந்தித்தது  குறித்து   எழுதியிருந்தார்.   சுகாதார    அமைச்சரைச்    சந்தித்தது   “இனிமை  கலந்த   ஆச்சரியம்”  என்று   கூறிய,     இருவரும்   தேநீர்   அருந்திக்  கொண்டே  உரையாடியதாகக்   குறிப்பிட்டிருந்தார்.