சிறையில் இருந்து சாதித்த சசிகலா : தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்

siraiதமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்தியாசாகர் ராவ் நியமித்துள்ளது அரசியல் வட்டாரதில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

இத்தீர்ப்பினை தொடர்ந்து நேற்று மாலை சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு பரபரப்பன அங்கரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து முதல்வராகும் சசிகலாவின் கனவும் பொய்த்துப்போனது.

எனினும், சிறையில் இருந்தாலும் ஆட்சியை கைப்பற்ற நினைத்த சசிகலா அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை நியமித்துவிட்டு சிறைக்கு சென்றார்.

சிறைக்கு சென்றபோதும் அதிமுக ஆட்சி அமைப்பதில் அவர் கவனமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், தமிழக முதல்வராக யாரை நியமிப்பது என்ற இழுப்பறி தொடர்ந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை மீண்டும் சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து பழனிச்சாமியிடம் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை உள்ளதால் அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அழைத்துள்ளார்.

யார் இந்த எடப்பாடி பழனிச்சாமி?

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர் பழனிச்சாமி

நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். அதிமுக பொதுச்செயலாளரான சசிகலாவின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்ததால் அதிமுக கட்சி தலைவராக தேர்வு செய்ய்ப்பட்டார்.

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுக சார்பில் முதல்வராக பதவியேற்பது உறுதி செய்யப்பட்டது.

இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஆளுநரின் இந்த அதிரடி அறிவிப்பு ஓ.பன்னீர் செல்வத்தின் அணியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதால் அடுத்தக்கட்ட ஆலோசனையில் அவர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

முதல்வராக நீடிப்பாரா எடப்பாடி பழனிச்சாமி?

தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமையை பதவியேற்க ஆளுநர் அழைத்துள்ள நிலையில், மற்றொரு முக்கிய உத்தரவையும் ஆளுநர் விதித்துள்ளார்.

அதாவது, ஆட்சி அமைத்த அடுத்த 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது அதிமுக கட்சி இரண்டாக பிளவுற்றுள்ள நிலையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது.

அதேசமயம், ஓ. பன்னீர் செல்வதின் அணியினருக்கு அதிகளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தால் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் முதல்வாரக தெரிவு செய்யப்படுவார்.

எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருந்தாலும், அடுத்த 15 நாட்களுக்கு பிறகு தான் இது நிலையான ஆட்சியா? அல்லது தற்காலிக ஆட்சியா என்பது நிரூபிக்கப்படும்.

-http://news.lankasri.com

TAGS: