டாக்டர் சுப்ரா: வட கொரியா சவப் பரிசோதனை விசயத்தில் மலேசிய சட்டத்தை மதிக்க வேண்டும்

dr subraசவப்  பரிசோதனை  செய்வதற்கென   மலேசியாவில்   சில    நடைமுறைகள்   இருப்பதை    வட  கொரியா  மதிக்க   வேண்டும்    என்று  சுகாதார      அமைச்சர்   டாக்டர்   எஸ்.சுப்ரமணியம்   வலியுறுத்தினார்.

வட  கொரியா    தலைவர்  கிம்   ஜோங்- உன்னின்   ஒன்றுவிட்ட    சகோதரர்  ஜோங் – நாம்   இறந்தது  மலேசியாவில்     என்பதால்   இறப்பு   தொடர்பான   சோதனைகளையெல்லாம்    செய்ய   வேண்டி  இருப்பதாக   அவர்   சொன்னார்.

“இதை  வட  கொரியா  நிராகரிக்கலாம்  அல்லது   ஒப்புக்கொள்ள   மறுக்கலாம்.  ஆனால்,   நாம்    சட்டப்படிதான்    நடந்து   கொண்டிருக்கிறோம்.  நம்   நாட்டில்   ஒன்று   நடந்துள்ளது.  அதை   அவர்களின்   சட்டப்படி  ஆராய   முடியாது.

“இறப்பு   அல்லது   கொலை   நம்   நாட்டில்   நிகழ்ந்தால்  அதை   விசாரிப்பதற்கென   நடைமுறைகள்   உண்டு.  தடயவியல்   மருத்துவ விசாரணையை   முடிக்கக்  குறுக்குவழி   எதுவும்   கிடையாது”,  என்று   அவர்   இன்று   செர்டாங்கில்   கூறினார்.