அஸ்மின் தாயார் காலமானார்

azminசிலாங்கூர்   மந்திரி புசார்    அஸ்மின் அலியின்   தாயார் ,82,    இன்று அதிகாலை  2.14 மணிக்கு   கேபிஜே   டமன்சாரா   நிபுணத்துவ   மருத்துவமனையில்   காலமானார்.

நான்கு  மாதங்களுக்குமுன்   தம்  தாயார்,    ச்சே    தோம்  யஹயா,    பக்கவாதத்தால்   தாக்கப்பட்டு   அம்மருத்துவமனையில்    சிகிச்சை    பெற்று  வந்ததாக     முகம்மட்    அஸ்மி   பிப்ரவரி   11-இல்   தெரிவித்திருந்தார்.

அவரது   உடல்நிலை   மேம்பாட்டு   வருவதாகவும்    அவர்    கூறினார்.  ஆனால்   ச்சே  தோமின்   நிலை  திடீரென   மோசமாகி   இன்று   அதிகாலை  மரணமடைந்தார்.