அரசுப் பணியாளர் குறைப்பு: உயர்மட்டத்திலிருந்து தொடங்க வேண்டும்

harapan புத்ரா  ஜெயா   அரசாங்கத்   துறைகளையும்    நிறுவனங்களையும்   திருத்தி   அமைப்பதன்  மூலமும்    ஒரே   மாதிரியான   பணிகளைச்  செய்யும்    அரசுத்துறைகளை     ஒழித்துக்   கட்டுவதன்  மூலமும்   அரசுப்  பணியாளர்   எண்ணிக்கையைக்   குறைக்க   முடியும்     என   பக்காத்தான்   ஹராபான்   கருதுகிறது.

அரசாங்கப்  பணியாளர்   எண்ணிக்கையைச்   சீராக்கும்   பணியை    பிரதமர்  துறையிலிருந்து    தொடங்கலாம்     என்று   ஒரு  கூட்டறிக்கையில்   தெரிவித்துள்ள    டிஏபி,  பிகேஆர்,   பார்டி   அமனா   நெகரா(அமனா)   ஆகிய  மூன்றும்,     அதில்   ஒன்பது   அமைச்சர்களும்   மூன்று   துணை   அமைச்சர்களும்   இருப்பதாகக்  குறிப்பிட்டது.

“அதில்    உள்ளவர்கள்   தகுதி,   திறமையின்    காரணமாக   அல்லாமல்    பிஎன்   பங்காளிக்கட்சிகளுக்கு  இடமளிக்க    வேண்டும்   என்பதற்காகவே   சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள்”,  என்று   அது   கூறிற்று.

அமைச்சர்களின்    தகுதிகொண்ட    சிறப்புத்   தூதர்களையும்   அமைச்சின்   ஆலோசகர்களையும்    ஒழிக்க   வேண்டும்  என்று   பக்கத்தான்  பரிந்துரைத்தது.

“நாட்டின்   மேம்பாட்டுக்கு    எந்த  வகையிலும்   உதவாத    பதவிகள்  அவை.  அரசதந்திரிகள்   செய்யும்   பணியைத்தான்   அவர்களும்    செய்கிறார்கள்”,  என்று    அவை   கூறின.

கூட்டரசுப்  பிரதேச   அமைச்சையும்    எடுக்க    வேண்டும்.  அது   கோலாலும்பூர்   மாநகராட்சி    மன்றம்,   புத்ரா  ஜெயா   கார்ப்பரேஷன்    போன்றவை    செய்யும்   பணிகளைத்தான்    செய்கின்றது.

அந்த   அமைச்சின்   ரிம1.6பில்லியன்   பட்ஜெட்டை    வீடமைப்பு,  ஊராட்சி   அமைச்சிடம்   கொடுக்கலாம்.     கட்டுப்படியான  விலையில்  வீடுகள்  கட்டிக்  கொடுக்க   அது  பயன்படும்    என  ஹராபான்   கூறியது.