விரைவில் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் ஏற்படும்..!

sambanthanதமிழ் மக்களுக்கு எதிராக கடந்த காலத்தில் நிலவிய வன்முறை சம்பவங்கள் விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தினை விட தமிழ் மக்கள் அனைவரும் இந்த நல்லாட்சி மீது எதிர்பார்ப்புகளை வைத்திருந்தனர். இதன் காரணமாகவே தற்போது ஏமாற்றம் அடைவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சமபந்தன் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த பல வருடங்களாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளியிட வேண்டும்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகள் தொடர்பில் இந்தியாவின் செயற்பாட்டினை நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித்தலைவர் ஆட்சியில் உள்ளவர்கள் ஏன் அர்ப்பணிப்புடன் செயற்பட மறுக்கின்றார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இலங்கை 70 ஆண்டுகளுக்கு மேல் காலனித்துவ நாடக இருந்தபோது இல்லாத இனப்பிரச்சினை சுதந்திரம் அடைந்த பின்னர் அதிகரித்துள்ளது.

இவ்வாறு இனப்பிரச்சினைகள் மோதல்கள் அதிகரிக்கவே நாட்டில் இருந்த மக்கள் பாதுகாப்பு இல்லாமல் வேறு நாடுகளுக்கு சென்று குடியமர்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளியாக புதிய அரசியலமைப்பு வரவேண்டும். இல்லையேல் அதற்கு முன்னர் தமிழர்களுக்கு எதிரான வன்முறை விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: