பெர்சத்து, ஹரப்பான் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டது

 

Bersatuacceptedபக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவ மன்றம் இன்று பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவை (பெர்சத்து) எதிரணியின் ஓர் உறுப்பினராக ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. அத்துடன், அது டாக்டர் மகாதிர் அறிவித்திருந்த நான்கு பரிந்துரைகளை விவாதிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

பக்கத்தான் ஹரப்பான் அனுவலகம் இந்த முடிவைத் தெரிவிக்க பெர்சத்துவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பும் என்று பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா, அமனா தலைவர் முகம்மட் சாபு மற்றும் டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் இன்று கூட்டாக விடுத்த அறிக்கை கூறுகிறது.

ஹரப்பானை ஆர்ஒஎஸ்சிடம் பதிவு செய்வதற்கு தலைமைத்துவ மன்றம் ஒப்புக்கொண்டதாக அந்த அறிக்கை மேலும் கூறிற்று.

இதற்கு முன்னதாக, பெர்சத்து தலைவரான மகாதிர் ஹரப்பான் அதன் பெயரை மாற்ற வேண்டும் என்று ஆலோசனை கூறியிருந்தார். மேலும், பொதுவான சின்னம் மற்றும் தேர்தல் கொள்கை விளக்க அறிவிப்பு வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

  • seerian wrote on 20 March, 2017, 21:41

    பெர்சத்து,ஹரப்பான் தலைமமைத்துவ மன்ற கூட்டத்தில் ஒரு தமிழனையும் காணாமே….

  • TAPAH BALAJI wrote on 20 March, 2017, 23:45

    முன்னாள் துணை பிரதமர் ஒருவர் ” மலேசிய இந்திய சமுதாயத்தின் பொருளாதார சீரழிவுக்கு மகாதீரும் ஒரு காரணம் ” என்று என்னிடம் சொன்னார் ! அதற்கு நான் ” அப்போது துணை பிரதமராக இருந்த நீங்களாவது எங்கள் சமுதாயம் முன்னேறுவதற்கு ஏதாவது செய்து இருக்கலாமே ” என்று கேட்டுவைத்தேன் , ” அதற்குள் என் அரசியல் வாழ்வையே மகாதீர் அழித்துவிட்டாரே ” என்று அவர் வேதனை பட்டுக்கொண்டார் !! மகாதீர் எங்கு இருந்தாலும் அந்த இடம் நமக்கு ஏழாம் இடத்தில் சனி !!!

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)