‘கிட் சியாங்கிடம் சொல்வதுபோல் நஜிப்பைப் பதவி விலகச் சொல்லும் துணிச்சல் அப்துல் ரஹ்மானுக்கு உண்டா?’

dapடிஏபி  அடிநிலை   உறுப்பினர்கள்  லிம்    கிட்  சியாங்கைக்   கட்சி   மத்திய    செயல்குழுவுக்குத்    தொடர்ந்து   தேர்ந்தெடுத்து   வருவது    கட்சியில்     அவருக்குள்ள  முக்கியத்துவத்தைக்    காண்பிக்கிறது   என்று   டிஏபி   உதவித்  தலைவர்    தெரேசா   கொக்   கூறினார்.

டிஏபி  நிகழ்வு   எங்கு  நிகழ்ந்தாலும்   அங்கு  உரையாற்ற   கிட்  சியாங்   அழைக்கப்படுவதை   அவர்   சுட்டிக்காட்டினார்.

“நேற்று,   கிட்  சியாங்  அரசியலிலிருந்து   விலகிக்கொள்ள   வேண்டும்  என   அம்னோ  அமைச்சர்   அப்துல்   ரஹ்மான்  டஹ்லான்   பேசியிருக்கிறார்.  டிஏபி  அடிநிலை   உறுப்பினர்கள்   கட்சித்   தலைமையில்   மாற்றத்தை   விரும்புகிறார்களாம்.

“அப்துல்   ரஹ்மானின்  கூற்று   அபத்தமானது.  ஆதாரமற்றது,  வழக்கமான   அம்னோ   பிரச்சாரம்தான்    அது”,  என  கொக்  இன்று  ஓர்   அறிக்கையில்  கூறினார்.

கிட்   சியாங்   டிஏபி   தலைமைச்  செயலாளர்   அல்ல.  அப்பதவியிலிருந்து  அவர்  விலகி   30  ஆண்டுகள்   ஆகின்றன.

கிட்  சியாங்மீது  கவனம்   செலுத்துவதை   விடுத்து   அப்துல்  ரஹ்மான்    பிரதமர்   நஜிப்  அப்துல்   ரஹ்மானைப்  பதவி  விலகச்  சொல்லி    வலியுறுத்தலாம்.

“அப்படி  கோரிக்கை   விடுக்கும்   துணிச்சல்   அப்துல்   ரஹ்மானுக்கு   இருக்குமானால்   அம்னோ   அடிநிலை   உறுப்பினர்களும்    மலேசியர்   பலரும்   அதை  வரவேற்பதைக்   காண்பார்”,  என  திரேசா  குறிப்பிட்டார்.