மாபுஸ்: சட்டம் 355 விவகாரத்தில் பாஸ், அரசாங்கம் இரண்டுமே அவசரப்பட்டு விட்டன

mafuz  ஷரியா நீதிமன்ற (குற்றவியல்   நீதி)ச்  சட்டத்தை     அல்லது சட்டம் 355 ஐ திருத்துவதற்கான தனிநபர் மசோதாவைத்   தாக்கல்    செய்யும்  விவகாரத்தில்    பாஸ்    கட்சியும்   அரசாங்கமும்  அவசரப்பட்டு    விட்டன.

அச்சட்ட  வரைவு   தனிநபர்   சட்டவரைவாகத்தான்   இருக்கும்    என்றும்    அரசாங்கம்   அதை   நாடாளுமன்றத்தில்   தாக்கல்    செய்யாது     என்றும்   பிஎன்   உச்சமன்றம்    செய்துள்ள  முடிவு   குறித்து   கருத்துரைத்தபோது  பாஸ்  பொக்கோக்  சேனா   எம்பி   மாபுஸ்   ஒமார்   அவ்வாறு   கூறினார்.

இரு    தரப்பும்     ஹுடுட்   சட்ட  அமலாக்கம்மீதான  நுட்பக்  குழு    தயாரித்திருந்த   வழிமுறையைப்  பின்பற்றி   இருக்க   வேண்டும்    என்றாரவர்.

“அதை  விவேகமான   முறையில்   பின்பற்றி  இருந்தால்   பிஎன்   உறுப்பினர்கள்   சட்டவரைவை   நிராகரித்திருக்க   மாட்டார்கள்.

“அவரச   அரசியலால்   நேர்ந்த  விளைவு   இது”,  என  மாபுஸ்   இன்று   நாடாளுமன்றக்   கட்டிடத்தில்    செய்தியாளர்களிடம்    தெரிவித்தார்.