சமய உரிமையை காப்பதில் பாக்காத்தான் முன்னணி! – கா. ஆறுமுகம்

Arumugamkampongpandanதெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். தேசிய முன்னணி ஆட்சியில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பல கோயில்கள் உடைபட்டன. சிலாங்கூர் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான். இதைத்தான் சமூகப்   போராளி பொ. உதயகுமார்  இன அழிப்புக்கு ஒப்பான நடவடிக்கை என வன்மையாகச் சாடினார். இதற்காக தேசிய முன்னணி அரசு அவருக்கு 30 மாத சிறை தண்டனை அளித்தது.

சிலாங்கூர் தேசிய முன்னணி ஆட்சியில் இருந்த போது 2004 முதல் 2007 வரையிலும் 96 இந்து கோயில்கள் உடைக்கப்பட்டன   என்று சிலாங்கூர் சட்ட மன்றத்தில் அறிவிக்கப்பட்டது (தமிழ்நேசன் 30.10.2008 பக்கம் 3). அதாவது சராசரி பத்து நாட்களுக்கு ஒரு கோயில் உடைப்பு என்ற நிலை!

mictempledemolitionகீர் தோயோவின் பாடாங் ஜாவா கோயில் உடைப்பு அவர் ஆட்சியை முடித்தது, அதோடு அவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சிறை சென்றார். இது காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா அல்லது தெய்வத்  திருவிளையாடலா என்பதை கற்பனைக்கு விட்டுவிடலாம்.

ஆனால், சமயம் என்பதை ஓர் உரிமையாக கருதும் சூழலில் அவை சார்ந்த அத்து மீறல்கள் கண்டத்திற்குரியவை.

அன்மையில் சிலாங்கூர் மாநில அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி, திட்டமிடல் கையேட்டில் முஸ்லிம் அல்லாதவர் வழிபாட்டுத்தலங்கள் குறித்த மாநில அரசின் விதிமுறைகளுக்கு எதிராக வெளியான பரபரப்பான பல்வேறு ஊடக அறிக்கைகள் அரசியல் வாடையுடன் வெளியாகின.

வழிப்பாட்டுத்தலங்களுக்கான தூரம் மற்றும் அதன் உயரம் குறித்த விதிமுறைகளை பாக்காத்தான் ஆட்சி செய்யும் சிலாங்கூர் மாநிலம் அமுலாக்க முயற்சி எடுத்துள்ளதாக குற்றச்சாட்டுகள். இதில் எந்த அளவு உண்மையுள்ளது?

templeதேசிய முன்னணியின் மத்திய அரசாங்கத்தின் நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ்,  தீபகற்ப மலேசியாவின் நகரம் மற்றும் நாடு திட்டமிடல் துறை ,  2010 இல்,  “சீனர் கோயில், இந்து கோயில், தேவாலயம் மற்றும் குருத்வாரா” ஆகியவை எப்படி இருக்க வேண்டும் என்று  ஒரு வரைவு வழிகாட்டி விதிகளை வெளியிட்டது. இவ்விதிகளைப் பகாங், திரங்கானு மற்றும் பெர்லிஸ் மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.

அதன்படி, தூர வரையரை – குடியிருப்பாளர் குழு அனுமதியளித்தால் அன்றி, பெரும்பான்மை மதத்தவர் குடியிருக்கும் பகுதியிலிருந்து ஏறக்குறைய 100 மீட்டர் தொலைவில் அமைத்தல் வேண்டும்.

மேலும் உயர வரையரையில்– இஸ்லாமியர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில், பிற மதத்தவரின் அடையாளச் சின்னங்கள் – சிலைகள் மற்றும் கட்டிடங்களின் உயரம் , மசூதியின் குவிமாடங்கள் மற்றும் தூபிகளின் உயரத்திற்கு ஏற்றவாறு (அவற்றை மிஞ்சிய உயரம் கூடாது) இருத்தல் வேண்டும்.

இவை பற்றி செய்தி வெளியிட்ட சிலாங்கூர்  மாநில ஜசெக துணைத் தலைவர் ஹன்னா  இயோ, இதே போன்ற விதிகள் ஜொகூர், நெகிரி செம்பிலான், கெடா போன்ற மாநிலங்களில் வழக்கத்தில் உள்ளதாக கூறுகிறார்.

temple sunwayஉதாரணமாக ஜொகூர் மாநிலத்தின் விதியின் படி, தூர வரையரை – உட்பிரிவு 4.4.2(ii) ஜொகூர் மாநிலத் தரநிலைத் திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதல்கள் கையேட்டில், முஸ்லிம் அல்லாதவர் வழிபாட்டுத் தளங்கள், முஸ்லிம் குடியிருப்பாளர்கள் வசிப்பிடத்திலிருந்து, குறைந்தது 50 மீட்டர் தூரத்தில் அமைந்திருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, உயரக் கட்டுப்பாடு – உட்பிரிவு 4.4.2(iii) சிலைகள் மற்றும் கட்டிடங்களின் உயரம், உள்ளூராட்சி மன்றத்தின் விதிகளுக்கொப்ப, அதாவது ஒரு மாடி கட்டிடத்தின் உயரம் அல்லது 5 மீட்டர் உயரத்திற்குட்பட்டு அமைந்திருக்க வேண்டுமாம்.

நெகிரி செம்பிலான் மற்றும் கெடா மாநிலங்களில், தூர வரையரை – மனை, பயன்பாடு சுற்றுச்சூழல், திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி வழிகாட்டுதல்கள் கையேட்டின்படி, முஸ்லிம் அல்லாதவர் வழிபாட்டுத் தளங்கள், முஸ்லிம் குடியிருப்பாளர்கள் வசிப்பிடத்திலிருந்து, அவசியம் 50 மீட்டர் தூரத்தில் அமைந்திருக்க வேண்டும்.

ஜோகூர் போலவே, இங்கும் உயரக் கட்டுப்பாடு – திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி வழிகாட்டுதல்கள் கையேட்டின்படி, சிலை மற்றும் சிற்பங்களின் அளவு & உயரம் ஒருமாடி கட்டிடத்தின் உயரத்திற்கு அல்லது அதிகபட்சம் 5 மீட்டருக்கு மேற்போகாமல் அமைந்திருக்க வேண்டுமாம்.

தேசிய முன்னணி ஆட்சியில் இருக்கும் எல்லா மாநிலங்களிலும் இந்த கட்டுபாடுகளை மத்திய அரசாங்கம் திணித்துள்ளது இப்போது தெளிவகியுள்ளது.

நிலைமை இப்படியிருக்கையில் பத்திரிக்கைகள் சிலாங்கூர் மாநிலத்தை தவறான செய்திகளைக் கொண்டு சாடுவதின் நோக்கம் தேர்தல் வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

temple bulit rotan2008-ம் ஆண்டிலிருந்து 2017 ஆண்டு  வரை, 112 சீனக் கோயில்கள், 105 இந்துக் கோயில்கள், 27 தேவாலயங்கள் மற்றும் 8 சீக்கியக் கோயில்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிகிறது.  இஸ்லாம் அல்லாதவர்களுக்கான இந்த 252 வழிப்பாட்டுத் தளங்களுக்கான ஒப்புதல், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள சமய உரிமையை  பாதுகாப்பதில் பாக்காத்தான் கொண்டிருக்கும் ஈடுபாட்டைப் பிரதிபலிக்கிறது எனலாம்.

அதே வேளையில், இந்தியர்களின் பண்பாட்டு அடையாளங்கள் கொண்ட பூஜாங் பள்ளத்தாக்கின் நிலை குறித்து தேசிய முன்னணி அரசு எவ்வகையான நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை நாம் அறிவோம். இதற்கு அரசியல் வழி தீர்வு காண முற்பட வேண்டும்.

SHARE THIS STORY :    

RELATED POSTS

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • Indian wrote on 13 April, 2017, 22:17

  தேசிய முன்னணிக்கு குறையாமல் பிகேஆர், ஆட்சி நடத்தும் சிலாங்கூர்றிலும் பல கோவில்களை உடைத்துள்ளது. பலர் பிகேஆர் நியாயமாக
  நடந்த்து கொல்வதாக குறுகிய பார்வையில் பார்க்கிறார்கள். ஆனால் பிகேஆர் இந்தியர்களை குறிப்பாக இந்துக்களை மிக மோசமாக நடத்துகிறார்கள்

 • en thaai thamizh wrote on 14 April, 2017, 13:02

  பாதிக்கப்பட்டவர்கள் ஆதாரத்தோடு கா.ஆறுமுகம் அவர்களிடம் தெரிவியுங்கள்– அவரின் பதிலை தெரிந்து கொள்ளுங்கள். பிறகு நடவடிக்கை எடுங்கள்.

 • Dhilip 2 wrote on 14 April, 2017, 13:45

  “இதைத்தான் சமூகப் போராளி பொ. உதயகுமார் இன அழிப்புக்கு ஒப்பான நடவடிக்கை என வன்மையாகச் சாடினார். இதற்காக தேசிய முன்னணி அரசு அவருக்கு 30 மாத சிறை தண்டனை அளித்தது.” என்பதை படிக்கவே வேதனையாக உள்ளது ……

 • சாக்ரடீசு wrote on 15 April, 2017, 9:54

  பக்காத்தான் தமிழர் பிரதிநிதிகள் கல்வி, வேலை வாய்ப்பு, சமயம், மொழி இப்படி எல்லாவற்றிலும் நமது பங்கை விட்டுக் கொடுக்காமல் இருக்க மேலும் கொஞ்சம் அதிக கவனம் கொள்வது நல்லது.

 • s.maniam wrote on 15 April, 2017, 12:32

  தெருவுக்கு ஒரு கோவிலும் ! வீட்டுக்கு ஒரு கோவிலும் ! ஜாதி க்கு ஒரு கோவிலும் கட்டி கொண்டிருந்தால் உடைக்காமல் என்ன செய்வார்கள் ! அரசாங்க மானியம் பெறுவதற்காக அங் கங்கே கோவில்களும் ! புது சாமிகளும் ! தோன்றி கொண்டிருக்கின்றன ! சசியு ( பன்றி ) விற்கும் கடையின் பக்கத்தில் பாபா செண்டர் ! கிறிஸ்தவனும் இதற்கு சளைத்தவன் இல்லை ! கடைத்தெருவில் சிலுவை அடையாளம் வைத்து விட்டு சர்ச் என்கிறான் ! சட்ட விரோத கூட்டம் என்று பிடித்து போகாமல் இருந்தால் சரி !! அடுத்த மதத்தினரை பார்த்தாவது நமக்கு அறிவு வரவில்லை என்றால் ! உதய குமார் இல்லை ! சிவா பெருமானே வந்தாலும் நம்மை காப்பாத்த உம் முடியாது ! திருத்தவும் முடியாது !

 • Dhilip 2 wrote on 16 April, 2017, 11:48

  இன்னமும் தமிழன் உறுபடாதற்கு, தெலுங்கன் , மலையாளீ, கர்நாடவன் , திராவிடன் என்று அளக்கும் கும்பலே …. நம்மையும் நம் முதுகையும் இன்னமும் பார்க்காமல் இருக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும் …எதிர்க்கட்சி வானளவில் செய்யவிடாலும், நம்மை நோகடிப்பதில்லை … எனவே மேலே ஆசிரியரின் நிலையை நான் வழிமொழிகிறேன் ….

 • சாக்ரடீசு wrote on 16 April, 2017, 15:45

  s.maniam- சூடு சொரணை உள்ளவர்களுக்கு உங்கள் வரிகள் உரைக்கிறதா கினிக்கிறதா என்று பார்ப்போம்….

 • abraham terah wrote on 17 April, 2017, 11:58

  திலீப், இப்போது நீங்கள் பெரிய பதவியில் இருப்பதால் உங்கள் முதுகை நீங்கள் நன்றாக பார்க்க முடிகிறது! அதே போல மற்ற தமிழர்களும் உங்களை போலவே இருக்க நீங்களும் உதவி செய்ய வேண்டும்! பொதுவாக தமிழர்கள் நாம் அனைவரும் முன்னேற்றத்தை நோக்கி போக வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை! நாமும் நமது கடமையினைச் செய்வோம்!

 • Dhilip 2 wrote on 17 April, 2017, 19:20

  ஐயா ஆபிரகாம் டேரா அவர்களே, நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு நன்றாக தெரியும் எனவே நீங்கள் என்ன செய்ய முடியும் என்று யோசியுங்கள் ! நான் எப்பொழுதுமே எப்படி மீன் பிடிப்பது என்று முடிந்தவரை நான் காணும் சக இளைஞனிடம் சொல்லி கொண்டு தான் இருக்கேன். நானாக மீன் பிடித்து தருவதில்லை ! இருப்பினும், கண் கெடட பிறகே சூரிய நமஸ்காரம் செய்வேன் என்பவனை என்ன செய்வது ? என்னால் முடிந்தவரைக்கும் , என் பொதுநல வேலைகளை செய்து கொண்டு தான் இருக்கிறேன் ….

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)