ஸாக்கிர்: இந்திய அதிகாரிகள் இங்கே வந்து என்னை விசாரிக்கலாம்

 

Zakirfearstortureஇந்திய அதிகாரிகள் மலேசியாவைப் போன்ற ஒரு நடுநிலைமையான நாட்டிற்கு வந்து தம்மை விசாரிக்கலாம்; அதற்கு தாம் தயார் என்று இஸ்லாமிய சமயப் போதகர் ஸக்கீர் நாய்க் கூறுகிறார்.

தாம் இந்தியாவில் விசாரிக்கப்பட்டால் அவர்கள் தம்மை சித்திரவதைக்கு உட்படுத்துவார்கள் என்றாரவர்.

“நான் அங்கு சென்றால், அவர்கள் என்னை சித்திரவதை செய்வார்கள் … அவர்கள் அதை மற்ற முஸ்லிம்களுக்குச் செய்துள்ளனர். என்னிடம் ஆதாரம் இருக்கிறது.

“என்னை விசாரிக்க வேண்டும் என்றால், ஒரு நேரடி செய்தியாளர் கூட்டத்தில் இந்த உலகில் எங்கு வேண்டுமானாலும் (செய்யுங்கள்). ஏன் (அவர்கள்) என்னை இந்தியாவுக்கு வரச் சொல்கிறார்கள்?

“வேண்டுமென்றால் பேசுவதற்கு அவர்கள் இங்கே வரலாம். நேரடியாக வேண்டுமென்றால், இங்கே வாருங்கள். நடுநிலைமை இடத்திற்கு வாருங்கள்”, என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இன்று, மலாய்க்காரர்களின் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசா ஏற்பாடு செய்திருந்த ஒரு கலந்துரையாடலில் ஸக்கீர் பங்கேற்றிருந்தார்.

இண்டர்போல் சிவப்பு நோட்டீஸ்

ஸக்கீருக்கு எதிராக இண்டர்போல் சிவப்பு நோட்டீஸ் பெறுவதற்கு இந்திய தேசிய விசாரணை ஏஜென்சி நடவடிக்கை எடுத்துள்ளது.