குடியை விடு..படிக்க விடு: மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய 2-ம் வகுப்பு சிறுவன்

தமிழகத்தில் இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் மதுக்கடை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி தனியாக நடைபயணம் மேற்கொண்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது படூர் கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ள மதுக்கடைகளை மூடக் கோரி அக்கிராமமக்கள் சில தினங்களுக்கு முன்னர் போராட்டம் நடத்தினர்.

அதுமட்டுமின்றி மதுக்கடைகளை அடித்தும் நொறுக்கியுள்ளனர்.

இந்நிலையில் அந்தக் கடையை மீண்டும் திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஆகாஷ் என்ற இரண்டாம் வகுப்பு மாணவன் குடியை விடு படிக்க விடு என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி போராட்டத்தில் ஈடுபட்டான்.

அச்சிறுவன் கடை அமைந்திருக்கும் பகுதிக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பதாகையை ஏந்தியபடி நடந்தே சென்றான்.

பள்ளிச் சீருடையுடன் சென்ற அந்தச் சிறுவன் அங்கிருந்த அனைவரது கவனத்தையும் ஈர்த்தான். மதுக்கடை அருகே சென்ற சிறுவனிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடை மூடியிருப்பதை சுட்டிக் காட்டி ஆகாஷை பள்ளிக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அதன் பின்னரே சிறுவன் பள்ளிக்குச் சென்றுள்ளான்.

-lankasri.com

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • LOGANATHAN wrote on 20 April, 2017, 14:05

  ம்ம்ம் சிறுவர்கள்கூட அரசாங்கத்தின் லட்சணத்தை துப்ப எழுந்து விட்டார்கள். நல்லது இழுத்து மூடுங்கள் டாஸ்மாக் . இளைஞர்களும் அவர்களின் குடும்பங்களும் வாழட்டும். நாடும் மக்களும் ஆரோக்கியமாக வாழலாம் .

 • THOVANNA PAAVANNA wrote on 20 April, 2017, 16:20

  மது கடைகள் திறக்கப்படக்கூடாது என்ற இந்த சிறுவனின் கோரிக்கை கூடவா அரசியல்வாதிகளின் காதில் விழவில்லை. 2001 இல் மது மற்றும் போதை பொருள் துஷ்பிரயோகம் என்னும் கருத்தரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்து கலந்துகொண்டேன். அக்கருத்தரங்கு சென்னையில் நடைப்பெற்றது. அந்த கருத்தரங்கில் என்னால் இன்றுவரை மறக்கமுடியாத கருத்து என்னவென்றால் சுயநலம் கொண்ட எந்த அரசியல்வாதியும் மதுவுக்கும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கும் எதிராக செயல்பட போவதில்லை.எத்தனையோ போராட்டங்கள், எதிர்ப்புகள் வந்தாலும் அத்தனையும் செவிடன் காதி ஊதிய சங்குதான். மாறாக இன்று தொடங்கி நாம் சிறு பிள்ளைகளிடம் முடிந்தால் பள்ளிக்கு போகும் வயதிற்கு முன்பிருந்தே இப்பழக்கத்தினால் ஏற்படும் ஈடுசெய்ய முடியாத பாதிப்புகளையும் இழப்புகளையும் எடுத்துக்கூறி விளக்கம் அளித்து நன்னெறியில் கொண்டுவந்தால், ஒருகால் இரண்டு தலைமுறைக்குப்பின் நாம் ஒரு முன்னேற்றத்தை காணமுடியுமாம். ஆக மது கடைகளை மூட எடுக்கும் செயல்களுக்கு செலவிடும் நேரத்தையும் பணத்தையும் இந்த சிறுவர்களுக்கு நல்வழி நடத்த பயன்படுத்தினால் நிச்சயம் மாற்றத்தினை காணலாம் அதுவும் இரண்டு தலைமுறைகளுக்குப்பின். எந்த பழக்கமும் காலவட்டத்தில் புறையோடி விடும். ஆக இதனை எதிர்க்க முனைவோர் பொறுமையுடன் நமது இளையோரிடம் நமது சேவையை தொடங்குவோம். இவ்விஷயம் சாதாரண ஒருவரால் கூறப்பட்டதல்ல, மாறாக இந்த விஷயத்தில் மிகவும் தேர்ச்சியும் அனுபவமும் பெற்றவரால் கூறப்பட்டது. சிந்திப்போம் செயல்படுவோம். மனிதம் காக்க சமூதாயம் நலம் பேணும் அனைவரும் கைகோர்த்து செயல் படுவோம் . இறைவனும் நம்மை ஆசீர்வதித்து வ வழிநடத்துவாராக.

 • en thaai thamizh wrote on 20 April, 2017, 20:01

  அப்பையன் பாராட்ட பட வேண்டியவன். என்ன- காலம் இவனைப்போன்ற சிறுவர்களை தமிழ் திரை பட வழியில் குடி மக்களாக்கினால் ஆகி ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

 • Iraama thanneermalai wrote on 21 April, 2017, 9:55

  மதுவை ஒழிக்க வேண்டும் எனில் ஜல்லிக்கட்டு பேராட்டம் போன்று ஒன்று மீண்டும் துவங்க வேண்டும்.கல்லூரி மாணவர்கள் அனைவரும் பங்கு பெற  வேண்டும். அரசியல் தலைவன் இல்லாமல் தமிழினம் தன் காலில் நின்று முன்னேற வேண்டும்.

 • abraham terah wrote on 21 April, 2017, 11:30

  ஐயா! தொ.பா, சாராயக்கடைகளை நடுத்துபவனே அரசியல்வாதிகள் தான்! அவன் எப்படி வாய் திறப்பான்? தேர்தலில் வெற்றிபெற கோடிகணக்கில் பணம் போட்டிருக்கிறான்! போட்டப் பணத்தை எடுக்க அவனுக்கு சாராயக்கடை வேண்டும்! ஆனால் ஒன்று! கோடிக்கணக்கில் பணம் போட்ட அரசியல்வாதி சீக்கிரம் நடுரோட்டில் நாயாய்த் திரிவான்!

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)