மக்ரிப் தொழுகையின்போது கடைகளை மூட வேண்டும் என்ற விதி பசார் மாலம் வியாபாரிகளுக்கு மட்டுமே

magribமக்ரிப்    தொழுகைக்காக   வியாபார   நடவடிக்கைகளை    நிறுத்தி   வைக்க  வேண்டும்   என்ற   சட்டவிதி    பசார்   மாலம் வியாபாரிகளுக்கு   மட்டுமே  பொருந்தும்   மற்ற   கடைக்காரர்கள்  அதைப்   பின்பற்ற    வேண்டியதில்லை   என்று   கிளந்தான்   அரசாங்கம்   விளக்கமளித்துளது.

கிளந்தானில்  பசார்  மால ம்   வியாபாரிகள்    அத்தனை   பேரும்    முஸ்லிம்கள்   என்று    ஊராட்சிக்குப்   பொறுப்பாக   உள்ள     ஆட்சிக்குழு   உறுப்பினர்   அப்துல்  பாத்தா   மஹ்மூட்   கூறினார்.

“ஏற்கனவே,  அது  பசார்  மாலம் வியாபாரிகளுக்காகக்   கொண்டுவரப்பட்ட   விதி   என்பதை    நான்   விளக்கி  இருக்கிறேன்.  கோத்தா  பாரு  முனிசிபல்   கவுன்சிலில்    நீண்ட   காலமாகவே  இது     அனுசரிக்கப்பட்டு   வருகிறது”,  என்றாரவர்.

எல்லாக்  கடைகளையும்  மூட    வேண்டும்    என்று    தாம்   கூறவே  இல்லை  என்று  அவர்  சினார்   ஹரியானிடம்   தெரிவித்தார்.