மாநில அரசின் புலனாய்வில் சமயப் பள்ளி குற்றம் ஏதும் செய்யவில்லை

boyசமயப்   பள்ளி  மாணவர்    ஒருவர்  அடித்துத் துன்புறுத்தப்பட்டதால்   இறந்தார்    என்று   சந்தேகிக்கப்பட்டாலும்    மாநில   சமய  விவகாரத்   துறையின்   விசாரணையில்    அந்தப்   பள்ளிமீது   எந்தக்  குற்றமும்  இல்லை   என்பது   தெரியவந்துள்ளது.

ஜோகூர்   ஆட்சிக்குழுவில்  சமய  விவகாரங்களுக்குப்   பொறுப்பாக  உள்ள  அப்ட்   முத்தலிப்    அப்ட்   ரகிம்,   ஜோகூர்   இஸ்லாமிய   சமய   விவகாரத்  துறை (ஜேஐஜே)  அதன்   விசாரணையை    முடித்து   விட்டிருக்கிறது     என்றார்.

“என்றாலும்,  அண்மைய  சம்பவத்தைக்   கருத்தில்  கொண்டு  இனி  புதிதாக   பணியாளர்களை   அதிலும்   குறிப்பாக   மாணவர்   நலன்பேணும்   பணியாளர்களைத்   தேர்ந்தெடுக்கும்போது      புதிய   வழிகாட்டி  விதிமுறைகள்  பின்பற்றப்படும்”,  என்றார்.