ஒரு துண்டு காய்ந்த நெல்லிக்காய் சாப்பிடுங்கள்: அதிசயம் இதோ

நெல்லிக்காயை வெயிலில் உலர்த்தி, காயவைத்து அதில் ஒரு துண்டு அளவு தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

நெல்லி பாக்கு தயாரிப்பது எப்படி?

1/2 கப் நெல்லிக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து, அதை ஒரு தட்டில் வைத்து, வெயிலில் வைத்து சில நாட்கள் உலர்த்தி, பின் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

நெல்லிக்காயை காயவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
  • கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டலில் இருந்து விடுபட ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை வாயில் போட்டு மெதுவான மென்று அதன் சாற்றினை விழுங்க வேண்டும்.
  • செரிமான பிரச்சனை உள்ளவர்கள், ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை வாயில் போட்டு மென்று விழுங்கினால், செரிமான பிரச்சனைகள் விரைவில் தடுக்கப்படும்.
  • நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனை ஏற்பட்டால், உணவு சாப்பிட்டு விட்டு ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை சாப்பிட வேண்டும்.
  • நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளது. இது வயிற்றில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, வயிற்று வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்க உதவுகிறது.
  • வாய் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்க, ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காய் துண்டை வாயில் போட்டு மென்று விழுங்க வேண்டும். இதனால் நெல்லிக்காயில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள், பாக்டீரியாக்களை அழித்து, வாயில் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கிறது.
  • நெல்லிக்காயில் உள்ள விட்டமின் C நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கம் ஏற்படாமல் தடுக்கிறது.
  • -lankasri.com