தாய்மொழிப்பள்ளிகளை அகற்ற வேண்டும்: ஆதரவும் எதிர்ப்பும் கிட்டத்தட்ட சரிபாதி

 

vernacularschoolsdoawayமலேசியர்களை இனம் மற்றும் சமயம் மட்டும் பிளவுபடுத்தவில்லை. சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு தேசியக்கல்வி விவகாரங்களிலும் மக்கள் வேறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

அனைத்துப் பள்ளிகளையும் இணைத்து ஒரே வகைப்பள்ளி அமைவிற்கு ஆதரவளிப்பீரா என்ற கேள்விக்கு கிடைத்த பதில் பிளவை வெளிப்படுத்தியது.

கடந்த மார்ச்சில், காஜிடாட்டா என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் ஒற்றுமைக்காகsurvey அனைத்துப் பள்ளிகளும் ஒரே வகைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு 41.4 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்தனர்; 47.4 விழுக்காட்டினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எஞ்சிய 11.3 விழுக்காட்டினர் எவ்வழியும் சரியே என்றனர்.

காஜிடாட்டா வலைத்தளத்தின் தகவல்படி, அது ஒரு வாணிக ஆய்வு நிலையம். அதன் ஆலோசகர் சைட் அராபி சைட் அப்துல்லா இடிட். அவர் யூனிவர்சிட்டி இஸ்லாம் அந்தாராபங்சாவில் ஒரு பேராசியராக இருக்கிறார்.