பாகுபலி-2 வசூல் சாதனை முறியடிப்பு, நம்பர் 1 இடத்தில் தங்கல்- முழு வசூல் விவரம்

bahubali2இந்திய சினிமா வர்த்தகத்தை பொறுத்தவரை அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல தொடங்கியுள்ளது. பாகுபலி-2 இந்தியாவில் மட்டும் ரூ 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது.

இந்நிலையில் கடந்த வருடம் வெளியான தங்கல் தற்போது சீனாவில் ரிலிஸாகி அங்கே ரூ 825 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது.

இதன் மூலம் தங்கல் உலகம் முழுவதும் மொத்தம் ரூ 1600 கோடி வசூல் வந்துவிட்டது. பாகுபலி-2 நேற்றுடன் ரூ 1600 கோடி வசூல் வந்துள்ளது.

எப்படியும் தங்கல் முதலிடத்திற்கு வந்துவிடும் என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை, ஆனால், பாகுபலி-2 இன்னும் சீனாவில் ரிலிஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி ரிலிஸாகும் தருணத்தில் தங்கல் சாதனையை பாகுபலி-2 முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

-cineulagam.com