நஜிப்: மலேசிய இந்தியர் பெருந்திட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால், 14 ஆவது பொதுத்தேர்தலில் இந்தியர்கள் அரசாங்கத்திற்கு வாக்களிக்க வேண்டும்

 

NajibMIBFMTகடந்த ஏப்ரலில் அரசாங்கம் மலேசியன் இந்தியன் பெருந்திட்டத்தை (எம்ஐபி) அறிவித்தது. இந்தியச் சமூகம் தொடர்ந்து அரசாங்கத்தை 14 ஆவது பொதுத்தேர்தலில் ஆதரித்தால் மட்டுமே அத்திட்டத்தின் நோக்கங்களை அடைய முடியும் என்று பிரதமர் நஜிப் ரசாக் பகிரங்கமாக அறிவித்தார்.

இந்தியர்கள் முடிவு எடுப்பதற்கு முன்னர் சிந்திக்க வேண்டும்; அந்தக் கணிப்பில் அவர்களின் மேம்பாட்டிற்கான திட்டத்தைக் கொண்டிருக்கும் கட்சியும் உள்ளடங்கியிருக்க வேண்டும் என்றாரவர்.

மலேசியாவில் இந்தியச் சமூகத்தை மேம்படுத்துவதற்காக பாரிசான் நேசனல் மேற்கொண்ட நடவடிக்கை பதிவேட்டை மறுக்க முடியாது என்று பறைசாற்றிய பிரதமர் நஜிப், இது எதிரணியைப் போன்றதல்ல, அதனிடம் சமூகத்தை மேம்படுத்தியதற்கான பதிவேடு அல்லது செயல் திட்டம் ஏதும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

“நாம் தூண்டிவிடப்பட்டு உணர்ச்சிகளின் அடிப்படையில் வாக்களிப்போமானால், அது வீணானதாகிவிடும், பிறகு இழப்புக்கு ஆளாகிவிடுவேம். நாடு மேலும், மேலும் வெற்றி பெற்றுவருகிறது, குறிப்பாக தேசிய உருமாற்றம் 2050 காட்சியில்.

“நமது பேரக்குழந்தைகள் இன்னும் பள்ளிக்கூடங்களில் இருக்கிறார்கள். அவர்கள் இப்போதிலிருந்து மலேசிய வெற்றியின் பரம்பரைச் சொத்தை அடைய வேண்டும்”, என்று தாமான் காயா தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சி பற்றி அளிக்கப்பட்ட விளக்கத்தைச் செவிமடுத்த பின்னர் நஜிப் கூறினார்.

இந்தியச் சமூகத்திற்கான எம்ஐபி திட்டம் அனைத்தும் அமலாக்கப்படுவதைக் கண்காணிக்கும் செயல்முறை தலைவராக மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியத்தை தாம் நியமித்திருப்பதாக நஜிப் தெரிவித்தார்.

– FMT