கிறிஸ்துவர்கள் காயப்பட்டுள்ள நிலையிலும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் போக்கு நிற்கவில்லை

Egyptian-Christiansகிறிஸ்துவர்கள் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும் புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு உணவளித்து மத நல்லிணக்கம் பேணுகின்றனர் காப்டிக் கிறிஸ்துவர்கள்.

கெய்ரோ

ரமலான் மாதத்தில் கிறிஸ்துவர்கள் இஸ்லாமியர்களுக்கு உணவளிப்பது வருடந்தோறும் நிகழும் நிகழ்ச்சி என்றாலும் இந்தாண்டு தொடர் தாக்குதலால் கிறிஸ்துவர்கள் காயப்பட்டுள்ள நிலையிலும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் போக்கு நிற்கவில்லை.

பல இஸ்லாமியர்களுக்கு இச்செய்கை ஆச்சரியப்படுத்துகிறது. கிறிஸ்துவர்கள் புனித மாதத்தையொட்டி பலமதத்தவருக்கும் உணவளித்து அவர்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். “நாங்கள் அனைவரும் ஒரே பகுதியில் வசிக்கிறோம். நான் இந்த அண்டை வீட்டு மனிதரின் மகனை வளர்த்தேன். அவர் ஒரு முஸ்லிம்” என்றார் ஒரு காப்டிக் கிறிஸ்துவர்.

எகிப்து மக்கள் தொகையில் காப்டிக் கிறிஸ்துவர்கள் சுமார் 10 சதவீதம் பேர்கள் உள்ளனர். கடந்த மாதத்தில் தேவாலயம் ஒன்றில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 29 பேர் இறந்துள்ளனர்.

-dailythanthi.com