உண்ணாவிரதமிருந்த பிகேஆர் பிரதிநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

hungerதேர்தல்  ஆணையம்(இசி)   தம்முடைய   கேள்விகளுக்குச்  சரியான   முறையில்   பதிலளிக்காததைக்  கண்டித்து    48-மணி   நேர   உண்ணாவிரதத்தில்   ஈடுபட்ட   பேராக்    சட்டமன்ற   உறுப்பினர்   மருத்துவ   மனைக்குக்   கொண்டு   செல்லப்பட்டார்.

பிகேஆரின்  ஹுத்தான்  மெலிந்தாங்    சட்டமன்ற    உறுப்பினர்   கேசவன்   சுப்ரமணியம்,  புத்ரா   ஜெயாவில்    இசி  தலைமையகத்துக்கு   வெளியில்   தமது   உண்ணாவிரதத்தைத்    தொடங்கினார்.    நேற்றிரவு   அவருடைய   உடல்நிலை   திடீரென்று    மோசமடையவே    ஆதரவாளர்கள்   அம்புலன்ஸ்   வண்டியை    அழைத்தனர்.

“கேசவனுட ந்   இருந்த     அவரின்    ஆதரவாளர்கள்  (இரவு) ஒன்பது   மணி   வாக்கில்  அவரது    உடல்நிலைமீது   கவலைகொண்டு   புத்ரா  ஜெயா   மருத்துவமனைக்குக்    கொண்டு    செல்ல    அம்புலன்சை    அழைக்க   முடிவு    செய்தனர்.

“இப்போது,  திடமாக  இருப்பதாகவும்   உடல்நிலை   தேறி   வருவதாகவும்    அறிகிறோம்”,  என   பிகேஆர்   வியூக    தொடர்பு  இயக்குனர்    பாஹ்மி   பாட்சில்    ஓர்    அறிக்கையில்   கூறினார்.