ஸெட்டி: பேங்க் நெகராவால் அதிகப்பட்ச அபராதம் மட்டுமே விதிக்க முடியும்

zeti1எம்டிபிக்கு   எதிராக   பேங்க்  நெகாராவால்    அதிகமாக    எதுவும்    செய்ய    இயலாது     என்று   கூறும்   அந்த   மத்திய   வங்கியின்   முன்னாள்   கவர்னர்   ஸெட்டி   அக்தார்   அசீஸ்,     வேண்டுமானால்   மலேசிய     வரலாற்றிலேயே   முன் எப்போதுமில்லாத   அளவுக்கு  “மிகப்  பெரிய   அபராதம்”  விதிக்கலாம்   என்கிறார்.

சட்ட   நடவடிக்கை   எடுக்கும்     அதிகாரம்    பேங்க்   நெகராவுக்கு  இல்லை    என்றாரவர்.

“எங்களிடம்     (மக்கள்)   அதிகம்    எதிர்பார்க்கிறார்கள்.   ஆனால்,  வழக்கு   தொடுக்கும்    அதிகாரம்   பேங்க்   நெகாராவுக்கு    இல்லையே.

“ஆனால்,  அந்த    அதிகாரத்தைக்   கொண்டுள்ள   அமைப்புகளுக்கு    எங்களால்    உதவ   முடியும்.

“(1எம்டிபி    விவகாரம்   தொடர்பில்)    சட்டத்துக்கு   எதிராக     நடந்துகொண்ட    நிதிக்  கழகங்களுக்கு    பேங்க்   நெகரா    அபராதம்   விதித்துள்ளது.   அது    மலேசிய   வரலாற்றிலேயே   மிகப்  பெரிய   அபராதம்.
“அதைத்தான்   பேங்க்   நெகராவால்    செய்ய   முடியும்”,  என்றார்.