ஜிஎஸ்டி இல்லாமல், பிரிம் கொடுக்க முடியும், உபரி பட்ஜெட்டையும் அடைய முடியும், குவான் எங் கூறுகிறார்

 

surpusbudgetlimsaysபக்கத்தான் ஹரப்பான் தலைமையிலான ஒரு மத்திய அரசு பொருள்கள் மற்றும் சேவைகள் வரியை (ஜிஎஸ்டி) அகற்ற முடியும். அதே வேளையில், பிரிம் ரொக்க நிதி உதவியை அளிக்க முடியும் என்பதோடு உபரி வரவு செலவுதிட்டத்தை அளிக்க முடியும் என்று பினாங்கு முதலைமைச்சர் லிம் குவான் எங் நம்புகிறார்.

ஜிஎஸ்டியை அமல்படுத்தாமலும்கூட, நாம் உபரி பட்ஜெட்டை அடையமுடியும் என்பதோடு பிரிம் தொகையை ஒவ்வொரு ஆண்டும் வழங்க முடியும் என்றாரவர்.

ஹரப்பான் தலைமையிலான பினாங்கு அரசின் வெற்றிகளைப் பாருங்கள். ஜிஎஸ்டி விதிக்காமல், பட்ஜெட் உபரியை சீராக அடைந்து வருகிறது என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறுகிறார்.