நேதாஜி விமானத்தில் உயிரிழக்கவில்லை:பிரான்ஸ் ஆய்வாளர் தகவல்

netaji-subhas-chandra-bose-புதுடில்லி: 1945 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என பிரான்ஸ் வரலாற்று ஆய்வாளர் ஆவணம் வெளியிட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததில் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது. தைவான் நாட்டில் கடந்த 1945 ஆம் ஆண்டு நிகழ்ந்த விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக மத்திய அமைச்சகம் ஆவணங்கள் வெளியிட்டது. அந்த ஆவணங்கள் தேசிய ஆவணக் காப்பகத்தில் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

எந்த சான்றும் இல்லை

நேதாஜி மரணம் தொடர்பான ரகசிய ஆவணம் ஒன்றை பிரான்ஸ் நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி.மோரே வெளியிட்டுள்ளார். அந்த ஆவணத்தில் தைவான் விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. விமான விபத்தில் உயிரிழந்தது நேதாஜிதான் என்பதற்கு எந்த சான்றும் இல்லை என்றும் மோரே, தனது ஆவணத்தில் கூறியுள்ளார்.

-dinamalar.com

SHARE THIS STORY :    

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)